எரிவாயு கசிவினால் ஸ்காபுரோ தொடர்மாடி கட்டிட மக்கள் வெளியேற்றம்

ஸ்காபுரோ மோர்னிங்சைட் உயர் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் கட்டிடத்தின் 17-மாடி கட்டட மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மோர்னிங்சைட் மற்றும் எல்ஸ்மியர் வீதியில் அமைந்துள்ள மோனல் கோர்ட் (Mornelle Court) கட்டிடத்தில் சம்பவம் நடந்துள்ளது.

ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவினர் கட்டிடத்தின் குடியிருப்பாளர்கள் அனைவரையும் சுற்றாடல்களில் சுற்றியுள்ள பகுதிகளையும் வெளியேற்றம் செய்துள்ளனர்.

குடியிருப்பாளர்கள் அருகாமையில் உள்ள புகலிடத்தை நாடலாம் அல்லது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் நண்பர்களை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடியாதவர்களிற்காக – குடியிருப்பாளர்கள் முடிந்த வரை குளிரில் பாதுகாப்பாக இருப்பதற்காக ரிரிசி (TTC) பேரூந்துகளை அனுப்பியுள்ளது.

கசிவினால் எவரும் பாதிக்கப்படவில்லை.

குடியிருப்பாளர்கள் எப்போது தங்கள் இருப்பிடங்களிற்கு திரும்பலாம் என்பது தெளிவாகவில்லை. கசிவிற்கான காரணமும் தெரியவரவில்லை.