எட்டோபிக்கோ பகுதியில் விபத்து

எட்டோபிக்கோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோசமான விபத்தினை அடுத்து, நெடுஞ்சாலை 401 ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.


இன்று காலை 5.30 அளவில், இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்று கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்குண்ட காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், கனரக வாகனத்தின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினை அடுத்து நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடங்கள் அனைத்தும், Martin Grove வீதிப் பகுதியில் மூடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை மேலும் சில மணி நேரங்களுக்க தொடரக்கூடும் என்றும் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனால் இன்று காலை நேர போக்குவரத்துகள் நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சம்பவ இடத்தில் அதிகாரிகள் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் குறித்த மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், இந்த விபத்தினை நேரில் பார்த்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து்ளளனர்.