ரொறொன்ரோ பெரும்பாகம் விசேட கால நிலை எச்சரிக்கை!

ஞாயிற்றுகிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை காலை ரொறொன்ரோ பெரும்பாகம் முதலாவது தீவிர குளிர்காலத்தை எதிர்நோக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ நகர் அதே போன்று ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களிற்கு ஒரு விசேட காலநிலை அறிவிப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

ஞாயிற்றுகிழமை பிற்பகுதியில் பலத்த பனிப்பொழிவு ஏற்படலாம் எனவும் திங்கள்கிழமை அதிகமான பனி பொழியலாம் எனவும் கனடா சுற்றுசூழல் சுருக்கமாக தெரிவித்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவு இன்று ஏற்படலாம் என கருதுவதால் போக்குவரத்தை பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை ஐந்து முதல் 10சென்ரி மீற்றர்கள் அளவில பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதுடன் சில பகுதிகளில் அதி உயர்வாக காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொறொன்ரோ பெரும்பாகம் எதுவித பனிபொழிவு எச்சரிக்கையையும் நோக்கவில்லை என கனடா சுற்றுசூழல் தெரிவிக்கின்றது.

திங்கள்கிழமை பகல் நேரம் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு இரவு முடிவிற்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரொறொன்ரோவில் ஞாயிற்றுகிழமை அதி உயர்வாக -1 C ஆக காணப்படும். திங்கள்கிழமை அதி உயர்வாக -3 C என எதிர்பார்க்கப்படுகின்றது.