ரொரன்ரோ மோனிங்சைட் ஹைட்ஸ் பகுதியில் விபத்து

டொரோண்டோ மோனிங்சைட் ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ள வாகன மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோனிங்சைட் அவனியூ மற்றும் ஃபிஞ் அவனியூ பகுதியி்ல் இனறு அதிகாலை வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதி வழியே பயணித்த வாகனம் ஒன்று, கவிழந்து அருகே இருந்த எரிவாயு வினியோக குழாய் மீது மோதி சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும், வாகனத்தை செலுத்திச் சென்றவர், வாகனத்தை விட்டவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த வாகனத்தில் இருந்து பெண் சாரதி ஒருவரே தப்பிச் சென்றதாகவும், அவர் பிறிதொரு வெள்ளைநிற மெர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனத்தில் ஏறிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினை அடுத்து மோனிங்சைட் அவனியூவின் வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய வழித்தடங்கள் மூடப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறிது நேரத்தின் பின்னர் வீதிகள் போக்குவரத்துக்கு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.