கனேடிய அரசின் கடல்சார் பாதுகாப்புக்கான முதலீடுகள்!

கடல்சார் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளில் கனேடிய அரசர்ஙகம் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது.


கனேடிய இயற்கை வளத்துறை அமைச்சர் ஜிம் காருக்கு பதிலாக, எட்மண்டன் மத்திய தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரான்டி பொய்சோனோல்ட் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கனேடிய சமுத்திரப் பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட சம்பவங்களைத் தடுத்தல் மற்றும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளைகளில் உடனடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளில் மேம்பாடுகளை மேற்கொண்டும் வகையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் அமையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு செயன்முறைகளாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்காக அரசர்ஙகம் 1.5 மில்லியனுக்கும் அதிகமான தொகையினை முதலிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கனிய எண்ணெய் அகழ்வு பணிகளின் போது ஏற்படும் விபரீதங்களை தடுக்கும் வகையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் எண்ணெய்வள நடவ்டிக்கை அறிவியல் திட்டங்களின் கீழேயே உள்ளடங்கும் என்ற போதிலும், எண்ணையையும் நீரையும் இலகுவாக பிரிக்கும் முறையினை மேம்படுத்துவதற்காக கனேடிய அரசாங்கம் அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்திற்கு ஆறு இலட்சம் டொலர்களை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரசாயன அபிவிருத்தித் துறையில் பரந்த அனுபவத்தினைக் கொண்டுள்ள பிரிட்டிஷ் கொலம்பிய ஆராய்ச்சி நிலையத்திற்கு அரசாங்கம் 9,25,000டொலர்களை வழ்ங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தினை கனடா நன்கு உணர்ந்து கொண்டுள்ளதாகவும், இவ்வாறான தூய்மை பேணல் தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொள்ளவதற்காக கனடா மேலும் பல முதலீடுகளைச் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.