கனடாவின் மர இறக்குமதியால் அமெரிக்காவுக்கு பாதிப்பு!

கனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் மர இறக்குமதி காரணமாக தமது நாட்டின் மர தொழிந்துறை கடுமையான பாதிப்பினை எதிர்கொள்வதாக அமெரிக்காவின் அனைத்துலக வர்த்தக ஆணையகம் தெரிவித்துள்ளது.


குறித்த இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கனடாவில் இருந்து மரம் இறக்குமதி செய்வதற்கு எதிரான இந்த தீர்மானம் 4 க்கு 0 என்ற வகையில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அது கனடாவின் மர ஏற்றுமதி துறைக்கு பாரிய பின்னடைவாக நோக்கப்படுகிறது.

குறித்த இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், கனேடிய நிறுவனங்களால் அமெரிக்காவுக்கு செலுத்தப்பட்டுள்ள சுமார் 500 மில்லியன் டொலர் வைப்பீட்டு நிதியினை மீளப் பெற முடியாதிருக்கும் என்று கூறப்படுகிறது.

கனடா தனக்கு சாதகமற்ற ஒரு இணக்கப்பாட்டில் கையெழுத்திடும் வரையில் , அமெரிக்கா இந்த வைப்பு நிதியை மீளச் செலுத்தாமல் நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கனேடிய மர ஏற்றுமதி துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.