டொரோண்டோ துணை நகரபிதா மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

ரொரன்ரோ துணை நகரபிதா டென்சில் மின்னன் வொங் (Denzil Minnan-Wong) எதிர்வரும் ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு, ரொரன்ரோ நகரமன்றில் வைத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள அவர், எதிர்வரும் ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் சார்பில், டொன் வலி ஈஸ்ற் (Don Valley East) தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தலுக்கான வேட்பு மனு நாட்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பதுடன், குறித்த அந்த தொகுதியில் போட்டியிடவுள்ளதாக இதுவரை யாரும் தெரிவிக்காத நிலையில், இவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டென்சில் மின்னன் வொங் கடந்த 24 ஆண்டுகளாக ரொரன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் வரையில், தான் தொடர்ந்தும் நகரசபை உறுப்பினர் பதவியில் இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.