சீன கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

சீனாவுக்கான நான்கு நாள் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை ஊக்குவிப்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இன்று சீனப் பிரதமர் லீ கே கியாங்கை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.

இன்று சீனத் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பு முடிவடைந்துள்ள போதிலும், கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்பாட்டு பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்த விபரங்கள் எவையும் இதன் போது வெளியிடப்படவிலலை.

இந்த பேச்சுக்களை அடுத்து கருத்து வெளியிட்ட சீனப் பிரதமர் லீ கெ கியாங், கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகளின் பொற்காலம் இது என்று வர்ணித்துள்ளதுடன், இந்த உறவானது மேன்மேலும் பலமடைந்து செல்லும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோல இன்றைய பேச்சுக்கள் குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, சீனப் பிரதமருடன் வெளிப்படையாகவும், நேரடியாகவும் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியதாகவும், சீனாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு கனடா ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும், சீன அதிகாரிகள் அதனை இறுதி நேரத்தல் தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.