நேத்ரா திரைப்பட பாடல்கள் வெளியீடு

SWETHA CINE ARTS (CANADA) ENTERPRISES என்னும் கனடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH) பாடல்கள் வெளியீடு கனடாவில் இன்று , டிசம்பர் மாதம் 2ம் திகதி ஸகாபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் இலவச நிகழ்வாக நடைபெற்றது.

இந்த நிகழ்வினைச் சிறப்பிக்கவென நேத்ரா திரைப்படத்தின் இயக்குனர் ஏ. வெங்கடேஸ் மற்றும் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மற்றும் கதாநாயகன் தமன் ஆகியோர் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்கள்.

அக்னி இசைக்குழுவின் இசையில் இசைச் சக்கரவர்த்தி தேவாவின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவின் இசையில் நேத்ரா திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டு மகிழவும், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் பிரமுகர்கள் ஆகியோர் நிறைந்து காணபபட்டனர்.

மேடையில் இயக்குனர் ஏ. வெங்கடேஸ், இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மற்றும் கதாநாயகன் தமன் ஆகியோர் பாடல்கள் மற்றும் நடனங்கள் எப்படி திரைப்படங்களுக்காக உருவாக்கபபடுகின்றன என்பதை விளக்கினார்கள்.  அவை பார்வையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன.

தமிழகத்தின் திரைப்படத்துறையினர் தமிழ் நாட்டில் நடத்திய பாடல் வெளியீடு ஒன்றை நேரடியாக கனடாவில் கண்டு மகிழ்ந்த வண்ணம் அனைவரும் உற்சாகமாக காணப்பட்டனர்.