இணைய தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது. கனேடிய பாதுகாப்பு திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அவ்வாறான தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள், முற்கூட்டிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயற்படும் முறை உள்ளிட்ட விடயங்களில் கனேடிய பாதுகர்பபு தரப்புக்கு தனிப்பட்ட, நீண்டகால பயிற்சித் திட்டங்கள் மூலம் விளக்கமளிக்கப்படவேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீனRead More →

கனடாவின் பிரதான நெடுஞ்சாலையில் ஏற்படவிருந்த பெரும் விபத்தில் இருந்து பேருந்தை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.கனடாவின் சட்பெரியில் இருந்து 47 பயணிகளுடன் கிளம்பிய பேருந்து நெடுஞ்சாலை 401 வழியாக சென்றுள்ளது.அப்போது திடீரென பேருந்தின் ஓட்டுநர் மயக்கம் அடைந்து பேருந்தின் ஸ்டியரிங்கில் சாய்ந்துள்ளார். இதனைக்கண்டு பேருந்தின் முன் பகுதியில் இருந்த பயணிகள் சிலர் கூச்சலிட்டுள்ளனர்.அப்போது ஒரு பெண் தானாக முன்வந்து பேருந்தை சாலை ஓரத்திற்கு வலைத்துள்ளார்.பெரும் வாகன நெரிசலில் சென்றுRead More →

ரொறன்ரோவின் முதல் பெண் மேஜர் ஜூன் றோலான்ட்ஸ் தனது 93 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். நீண்ட கால பராமரிப்பில் இருந்த இவர் கடந்த வியாழக்கிழமை (21) இரவு இயற்கை எய்தியுள்ளதாக இவரது மகள் தெரிவித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு மாநகரசபைக்கு தெரிவானதில் இருந்து இவரது நீண்ட கால அரசியல் மேஜராகும் வரை நீடித்தது. 1991 ஆம் ஆண்டு மேஜராக தெரிவு செய்யப்பட்ட இவர் 1994 ஆம் ஆண்டு வரைRead More →

ஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சுமார் 59 வயது  பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாஸ்மோர் அவென்யூ மற்றும் மிடில்பீல்ட் வீதிப் பகுதியில் (near Middlefield Road and Steeles Avenue East), நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு எட்டு மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்தச் சம்பவத்தின் போது வாகனத்தினால் மோதுண்ட பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதனை ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர்Read More →

திறமையான இந்திய பணியாளர்களை கனடா தன் பக்கம் ஈர்க்க, விசா விதிமுறைகளில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 7 நாட்களில் வேகமாக வேலை பெறும் வகையில் கனடா தனது விரைவான விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இந்த புதிய திட்டம் மூலம் அங்கு 988 இந்தியர்கள் வேலை பெற்றுள்ளனர். மேலும், 296 சீன மக்களும், 92 பிரான்ஸ் குடிமக்களும் அங்கு இதுவரை வேலை பெற்றுள்ளனர். வேலையும் விசாவும் பெறுவது மிகவும் எளிதானRead More →

கனடாவில் உற்பத்தித்துறையின் விற்பனை கடந்த ஒக்டோபர் மாதத்தில் எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் உற்பத்தித்துறை விற்பனைகள் எதிர்பாராத அளவில் 0.4 சதவீத வீழ்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக வாகன உற்பத்தித் துறையில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளதாகவும், எனினும் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிப் பாகங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதத்தில் சில வாகன துறை சார் தெரிற்சாலைகள்Read More →

மெக்சிக்கோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு கனடியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாயன் இடிபாடுகளிற்கு கப்பல் பயணிகளை ஏற்றிச்செல்கையில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் அமெரிக்கர்கள் நால்வர், இரண்டு சுவீடன் நாட்டவர்கள் மற்றும் மெக்சிக்கோ நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளைRead More →

அமெரிக்க இராஜாங்க செயலாளர் றெக்ஸ் டில்லர்சன் தனது முதலாவது அதிகாரத்துவப் பயணமாக இன்று கனடாவுக்கு வருகை தரவுள்ளார். இநதப் பயணத்தின் போது ஒட்டாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டைச் சந்திக்கவுள்ள அவர், அதனைத் தொடர்ந்து கனேடிய அமெரிக்க உறவுகள் தொடர்பிலான கனேடிய அரசாங்கத்தின் அமைச்சரவைக் குழுவின் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இந்த கனேடிய பயணமானது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீடித்துவரும் நட்புறவின் ஒரு வெளிப்பாடாகவே இடம்பெறுகின்றதுRead More →

புதிய சனநாயக கட்சியின்(NDP) முன்னாள் தலைவர் Tom Mulcair, எதிர்வரும் ஆண்டுடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் புத்தாண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுடன், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க முடிவு செய்துள்ளதனை புதிய சனநாயக கட்சியின் பேச்சாளர் உறுதிப்படுத்தி்யுள்ளார். அதேவேளை அவர் பதவிவிலகும் நாள் தொடர்பிலான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டதன் பின்னர், TomRead More →

Rexdale பகுதியில் நேற்று இரவு மூன்று பேர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Dixon வீதி மற்றும் Skyway Avenue பகுதியில் நேற்று இரவு 10.20 அளவில் வாகனம் ஒன்றில் வந்தவர்கள், குறித்த மூன்று பேரும் பயணித்துக் கொண்டிருந்த காரை நிறுத்தி துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், அந்த காரினுள் துப்பாக்கிச் சூட்டுக்Read More →