Reading Time: < 1 minute

கனடாவில் பாரிய குற்றச் செயல்களுடுன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

பெரிய அளவிலான காப்புறுதி மோசடியும், வன்முறை மிரட்டல்களும் மேற்கொண்ட குற்றவாளிகள் குழுவொன்று அடையாளம் காணப்பட்டு தற்போது முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை “ப்ராஜெக்ட் அவுட்ஸோர்ஸ்” எனப் பெயரிடப்பட்டிருந்தது. பீல் பகுதியில் இன்று (திங்கள்) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன.

“2023ஆம் ஆண்டு தெற்காசிய வணிக சமூகம் மீது அதிகரித்த வன்முறை மிரட்டல்களுக்கு பதிலளிக்கவே இந்த விசாரணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா கூறியுள்ளார்.

இந்த மிரட்டல்கள், சுடுதல், தீவைத்தல், மற்றும் பல வன்முறைகளாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விசாரணை அதிகாரி பிரையன் லொரெட் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, பெரும்பாலான குற்றங்களில் பிராம்ப்டனில் செயல்பட்டு வந்த குழு தொடர்புடையது என தெரியவந்துள்ளது.

இந்த குழு ரொறன்ரோ பெரும்பாக GTA (Greater Toronto Area) பகுதியில் பல புலனாய்வு விபத்துக்களை திட்டமிட்டு ஏற்படுத்தி, காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துகள் முற்றிலும் திட்டமிட்ட மோசடி எனவும் இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.