Reading Time: < 1 minute

கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டில் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

நியூபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பெண்ணின் சடலம் மீட்கப்படுவதற்கு முதல் நாள் குறித்த பெண்ணின் கணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்தப் பெண்ணை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

33 வயதான ஈரானிய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தப் பெண்ணின் கணவர் 34 வயதான ஈரானிய பிரஜை எனவும் அவரது சடலம் அவர்களது வீட்டில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலையா தற்கொலையா போன்ற எந்தவொரு விபரங்களையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.