அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையின் முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், 1988ஆம் ஆண்டின் கனடா – அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் இரு தூண்களாக விளங்கும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான பொறிமுறை மற்றும் கலாசார பொருட்களுக்கு விலக்களித்தல்Read More →

உள்ளூர் வணிகத்தில் (Whitecourt business) சுமார் 2 மில்லியன் கனேடியன் டொலருக்கும் மேலதிகமாக மோசடியில் ஈடுபட்ட முன்னாள் மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 2017 ஆம் ஆண்டு குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை தொடர்பில் அறிக்கையைப் பெற்ற பின்னர், பொலிஸார் விசாரணை ஒன்றை நடத்தியிருந்தனர். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு குறித்த உள்ளூர் வணிகத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படியில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் ஜோயல் பிரையன்Read More →

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ரொறொன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிர்ச்மவுண்ட் வீதி (Birchmount Road) மற்றும் லாரா சௌகார்ட் வாக் (Laura Secord Walk) அருகே இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் காயமடைந்த 30 வயதுடைய பெண் ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.Read More →

ரொறொன்ரோ டவுன்ரவுன் வோட்டர் பிரொன்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக நம்பப்படும் நான்கு சந்தேக நபர்களைத் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த சந்தேகநபர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். லேக் சோர் புஃளிவார்ட் மற்றும் போர்ட் யோர் புஃளிவார்ட் பகுதியில்Read More →

புதிதாக பாடசாலை செல்ல தயாராகும் பிள்ளைகளிற்கு, இலவச தேவைகளை வழங்கும் திட்டம், இம்முறையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு தேவையான பொருட்கள், உணவு மற்றும் முடி வெட்டுதல் போன்ற சேவைகள் வறுமை எதிர்ப்பு ஆர்வலர் என அறிமுகப்படுத்தி கொண்ட டான் ஜோன்ஸ்ரொன் என்பவரால் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. இதற்கமைய ஆறாவது ஆண்டில் தடம் பதித்த இந்த திட்டத்தின் ஊடாக, கிட்டத்தட்ட 2,100 பேர் பயனடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு எட்மன்டனில் இடம்பெற்ற இந்நிகழ்வு, புதிதாகRead More →

கனடாவில் தங்கி கல்வி பயிலும் சவுதி மாணவர்களை, அந்நாட்டு அரசு நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். சவுதி மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு திரும்ப வேண்டும் என்ற காலக்கெடு கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட மாணவர்கள், மீண்டும் தாய் நாடு திரும்புவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதோடு, கனடாவில் தங்கும் முயற்சியாக புகலிட கோரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், கனடா குடிவரவு அகதிகள்Read More →

வடகிழக்கு ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு இளைஞர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (ஞாயிறுக்கிழமை) அதிகாலை மார்க்சிசிடு அவென்யூ மற்றும் ஷெப்பார்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயது மதிக்க தக்க இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் இதுவரைRead More →

கனடியத் தமிழ் ஊடகங்களிற்கு, கனடியத் தமிழர்கள் சார்பாக எனது தாழ்மையான மடல் ! ஊடகத்தின் பலம் என்பது, பல அணு குண்டுகளின் அதிர்வையும் விட, மக்கள் சக்தியை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வைப்பதே அதன் திறமை. மக்களிற்காக, மக்களின் குரலாக சமநிலையில் நின்று கருத்தை சொல்வதே ஊடகத்தின் தார்மீக கடமையில் முக்கியமான அம்சம். தற்பொழுது, எம் தமிழ் இனம் முள்ளிவாய்க்கால் வரையும், மற்றும் சுனாமி அனர்தத்தாலும் சிலRead More →

கனேடிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கை பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் நீதியமைச்சர் ஜோடி விலசன் இந்த நியமனங்களை நேற்று(வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சுரங்கனி குமாரநாயக்கவே இவ்வாறு கனேடிய மேல்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இவர் ஒன்றாறியோவின் பிரம்டன் மாநில மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.Read More →

நஃப்டா எனப்படும் வட அமெரிக்க வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இந்த வாரப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள், தீர்மானங்கள் எவையும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் ஒரு விரைந்த தீர்மானத்தை எட்டும் நோக்கில், அடுத்த வாரமும் இரண்டு நாட்டு பிரதானிகளும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்த விவகாரம் தொடர்பில் நேற்று முடிவு காணப்படும் என்று இரண்டு நாடுகளின் தலைவர்களும் தாமாகவே ஒருRead More →