Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள Ontario மாகாண தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். Markham Thornhill தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் Juanita Nathan போட்டியிடுகின்றார். Scarborough Rouge Park தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் Sumi Shan போட்டியிடுகின்றார். இந்த இரண்டு தொகுதிகளிலும் PC கட்சியின் வேட்பாளர்களாகRead More →

TTC போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும், வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்தோருக்கு, போக்குவரத்துக் கட்டணத்தில் சிறப்புக் கழிவு வழங்கப்படும் புதிய திட்டம் ஒன்று நேற்றிலிருந்து (April 04, 2018) நடப்பிற்கு வருகின்றது. ஒன்ராறியோ தொழிலாளர்கள் திட்டம் அல்லது ஒன்ராறியோ உடற்குறைபாடுடையோர் ஆதரவுத் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுவோர், இந்த புதிய பயணக் கட்டணக் குறைப்புத் திட்டத்தின்கீழ் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. புதன்கிழமையிலிருந்து நடப்புக்கு வரவுள்ள இந்த திட்டத்தின் கீழ், நாளாந்த மற்றும்Read More →

Facebook சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ள நிலையில், அதில் 6,20,000 ற்கும் அதிகமான கனேடியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளுக்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு, குறித்த இந்த எண்ணிக்கையான கனேடியர்களின் தகவல்கள், முறையற்ற வகையில் பகிரப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6,22,161 கனேடியர்களின் முகநூல் தரவுகள், முறையற்ற வகையில் கேம்பிரீட்ஜ் அனலிட்டிக்கா நிறுனத்திற்கு, செயலிகள்Read More →

நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக ரொரன்ரோ நகரின் பல பாகங்களிலும் மின்விநியோகங்கள் துண்டிக்க்பபட்ட நிலையில், தற்போது அவற்றில் பெரும்பாலாவர்களுக்கான மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இந்த மின் துண்டிப்பினால் பாதிக்க்பபட்ட நிலையில் இரவு முழுவதும் தங்களின் பணியாளர்கள் மேற்கொண்ட திருத்த வேலைகளினால் இன்று வியாழக்கிழமை காலையில் 110 பேரைத் தவிர ஏனையவர்களுக்கான மின் விநியோகங்கள் சீர் செய்யப்பட்டுவிட்டதாகவும் அது விளக்கமளித்துள்ளது. நேற்றைய இந்தRead More →

மொர்னிங்சைட் அவன்யூ (Morningside Avenue) மற்றும் லோறன்ஸ் அவன்யூ (Lawrence Ave) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பொதுமக்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இரு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸ் ஆரம்பித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி அரங்கேறிய இச்சம்பவம் தொடர்பான காணொளி, இணையத்தில் வைரலாக பரவியதன் பின்னணியிலேயே ரொறன்ரோ பொலிஸ் அதிகாரிகள், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறித்த காணொளியில், அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்றின் முகப்பு மாடிப்Read More →

கனடாவில் 66 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் ஆட்டிஸம் நோய் தொற்றியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொது சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. அதில், கனடாவில் 5 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 66 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆட்டிஸம் எனும் மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் சதவீதம் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதும்Read More →

ஒன்ராறியோ மாகாணத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல என ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார். ஆளும் லிபரல் அரசாங்கம் அண்மையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்தது. இந்த வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி ஒன்ராறியோ மாகாண சட்டமன்றுக்கான பொதுத் தேர்தலை குறிவைத்தது முன்வைக்கப்பட்டதாக எதிர்கட்சிகளினால் பரவலாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுகுறித்து ஒன்ராறியோ முதல்வர்Read More →

மாவீரர்களுக்காக முள்ளிவாய்க்கால் முற்றத்தினை இந்தியாவில் நிறுவுவதற்கு பத்து ஏக்கர் நிலம் வழங்கி முன்னின்று உழைத்த தமிழ் பற்றாளரும், ஈழத்தமிழர் மீது அதீத பாசமும் கொண்ட இலக்கியவாதியான முனைவர் அ. நடராஜன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுரோ தமிழிசைக் கலாமன்றத்தில் கனடா தமிழ் வானொலி அறிவிப்பாளரும், கனடிய தமிழர் தேசிய அவையின் ஊடகப்பேச்சாளருமான தேவா சபாபதி தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் கல்விமான்கள், கனடிய பொது அமைப்பின் பிரதிநிதிகள்,Read More →

கனடா உலகில் மிக மகிழ்ச்சியான நாடு தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ளது. உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்த வருடம் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வருடம் நோர்வே முதலிடத்தில் திகழ்ந்தது. ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கையிலேயே இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை, முன்னர் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் திகழ்ந்த டென்மார்க் தற்போது மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அத்துடன்,Read More →

கடந்த சனிக்கிழமை [March 10, 2018] நடைபெற்ற ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாதக்கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான கட்சியின் ஒன்றுகூடல் முடிவை அறிவிக்காமலே கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் முடிவிற்கு வந்தது. பின்னர் முழுமையான விபரங்;கள் அற்றே முடிவு ஒன்று அறிவிக்கப்பட்டது. எவ்வித அறிவிப்புமின்றி ஐந்தரை மணித்தியாலங்கள் தொடர்ந்த நேரலைகளில் பல விடயங்கள் வதந்திகளாகவே பேசப்பட்டன. பகிரப்பட்ட பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவையாக அமைந்தன. சி.பி.சி ஆக இருக்கட்டும் சி.ரி.வியாக இருக்கட்டும். சிற்றிRead More →