அமெரிக்க அரசாங்கம் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள வரிவிதிப்பு தொடர்பில் ஆராயும் வகையில் நடைபெறவுள்ள மாநாட்டில்  கனடாவும் இணைந்துக் கொண்டுள்ளது. கனடாவின் சார்பில் மத்திய அனைத்துலக வர்த்தக துணை அமைச்சர் திமோத்தி சார்ஜன்ட் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. ஜப்பானும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இம்மாநாட்டில், மெக்ஸிகோ, கனடா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன. இதில் குறித்த நாடுகளின் துணை அமைச்சர்கள் கலந்துகொண்டு, அமெரிக்க அரசாங்கம் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள வரிவிதிப்பினைRead More →

தஞ்சக் கோரிக்கையாளர்களினால் ஏற்பட்ட செலவுகளால் திண்டாடும் ரொறன்ரோ நகரத்திற்கு, 11 மில்லியன் டொலர்கள் வழங்க மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த நிதியின் மூலம் தஞ்சக் கோரிக்கையாளர்களின் அவரச தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள முடியுமென, நம்பப்படுகின்றது. இதேவேளை, தஞ்சம் புகுந்தோர்க்கு தற்காலிக வீடு வழங்குவதற்கான நிதி உதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடரும் என, மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர், தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம்,Read More →

ரொரன்ரோ காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையில் பெருமளவான போதைப் பெருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ‘Project Switch’ எனப்படும் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை ஒன்றை கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ரொரன்ரொ காவல்துறை மேற்கொண்டது. இந்த நிலையில் இந்த கூட்டு விசாரணை நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு ஒன்று நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30க்கு College Streetஇல் அமைந்துள்ள ரொரன்ரோRead More →

கல்கரியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கல்கரியின் தென்மேற்கே உள்ள மலைப்பாங்கான பகுதியில் இடம் பெற்றுள்ள அந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த அந்த விமானம் இரண்டு இயந்திரங்களைக் கொண்ட சிறிய விமானம் என்றும், அதில் இரண்டு பேரே பயணம் செய்த நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கல்கரியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்தRead More →

வல்வை படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும். இந்திய அமைதிகாப்புப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொலை செய்தார்கள்.  யாழ்ப்பாணம் மருத்துவமனைப் படுகொலை, இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த பாடசாலைகள் மீதான தாக்குதல்கள், சாவகச்சேரி சந்தையின் மீதான வான் தாக்குதல் என்று பலர் கொல்லப்பட்ட பாரிய படுகொலைகள் பலவும் அவர்களால் புரியப்பட்டன. ஆனால் இன்று திட்டமிட்ட முறையில் சகலதும் இந்திய அரசாளும், தூதரகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, மறக்கடிக்கப்படுகின்றன என்பதேRead More →

கனடாவில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞன் ஒருவரை காப்பாற்றியுள்ள ரயில்வே ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது, கனடாவிலுள்ள Dundas ரயில்வே நிலையத்தில்,  J.P Attard என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தண்டவாளத்தில் 20 வயதுள்ள இளைஞன் ஒருவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் Attard, உடனடியாக மின் இணைப்பை துண்டிக்குமாறு சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, அந்த இளைஞனை நோக்கி சென்று அவரிடம்Read More →

ஒன்ராறியோவில் காட்டுத் தீயின் புகைமூட்டம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக குறிப்பிட்ட இடங்களில் இருந்து ஏற்கனவே மக்கள் வெளியேறியுள்ளதுடன், பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த காட்டுத் தீயின் புகைமூட்டம் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.Read More →

கல்கரி நகரில் ஒரே பகுதியில் இரண்டு வீடுகளில் மூன்றுபேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று முற்பகல் 11 மணியளவில் கல்கரி நகரின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள வீடுகளில் மொதம் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. Applevillage Court பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலமும், Hidden Valley Driveவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஒரு பெண்ணினதும், ஒரு ஆணினதும் என்று இரண்டுRead More →

பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்டில் (near Charlottetown Airport) சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விமானம் பெம்ப்ரூக்,  ஒன்ராறியோவில் (Pembroke, Ontario)  இருந்து புறப்பட்டு, செல்ல வேண்டிய இடம்வரையில எந்தவித கோளாறுகளும் இன்றிப் பயணித்த போதிலும், தரையிறங்கும் போது ஓடுபாதைக்கு அருகே வீழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 3 பேர் பயணித்த நிலையில் அவர்கள் சம்பவத்தின் போதே உயிரிழந்துவிட்டதை அங்கு விரைந்து மீட்புப்Read More →

ரொறன்ரோ பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த யூலை மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 10 வயது சிறுமி மற்றும் 18 வயது யுவதி ஒருவரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கடந்த நாட்களாக மலர் அஞ்சலி மற்றும் சுடர்Read More →