கனடாவில் இருந்தும் இறக்குமதி செய்யும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்க இறக்குமதிப் பெருட்களுக்கு கனடாவும் வரி விதிப்பதற்கு எண்ணியுள்ளது. அதன் படி யூலை மாதம் முதல் நாளில் இருந்து 13 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதற்கு கனடா தீர்மானித்துள்ளது. எஃகுவிற்கு 25சதவீத வரியும், அலுமினியத்திற்கு 10 சதவீத வரியையும் அமெரிக்க அதிபர் விதித்துள்ளதுடன், அந்தRead More →

வெளியே செல்வது குறைவு என்ற நிலையில் வார இறுதியில் ஒரளவு வெளியே சென்று களநிலவரங்களை பரவலாக அவதானித்தேன். ஒன்று தெளிவாகப் புரிந்தது. தேர்தல் களைகட்டவில்லை. தேர்தல் பரப்புரையில் மந்தநிலை. மக்களிடம் தேர்தல் குறித்த எவ்வித பரபரப்பும் கிடையாது. இந்நிலை சனநாயகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய ஓட்டையை சுட்டி நிற்கிறது. 1971இல் நடைபெற்ற ஒ;ன்ராரியோ பாராளுமன்ற தேர்தலில் 73.5 சதவீத வாக்குப்பதி;வில் பழமைவாதக்கட்சியின் பில் டேவிஸ் முதல்வர் ஆனார். அதன் பின்னான தேர்தல்களில்Read More →

டொரோண்டோ ஸ்கார்பாரோ நகரில் இயங்கிவரும் வாகன விபத்து சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனம் “மெலனி டேவிட் சட்ட நிறுவனம்” (Law Offices of Meleni David) மீது டொரோண்டோ மாநகர போக்குவரத்து சபை (TTC) $ 1.5 மில்லியனுக்கு இழப்பீடு வழக்கு தொடுத்துள்ளது . பஸ் மற்றும் வாகன விபத்துக்கள் சம்பந்தப்பட்ட மோதல்களின் பாதிக்கப்பட்டவர்கள் என்று போலியான செலவு கணக்குகளை காட்டி; முறையாக மருத்துவ உதவியோ , வேறு உதவிகளோ வழங்கப்படாமல், அதற்குரியRead More →

நான் இங்கு பகிரவிருக்கும் செய்திக்குள் பல ஆழமான பார்வைகள் உண்டு. அவை ஒவ்வொன்றாக தீவிர ஆய்விற்கு உட்படுத்த வேண்டியவை. எனினும் முதற்கண் அவற்றை மேலெழுந்த வாரியாக உங்கள் முன் வைக்கின்றேன். எமது நாட்டின் மக்கள் கணிப்பு இறுதியாக 2016 இல் நடைபெற்றது. அது குறித்த தரவுகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. தற்போது ஒன்ராரியோவில் தேர்தல் என்பதால் அவற்றை ஆராய முயன்ற போது சிக்கிய விடயங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 1) எவ்வளவுRead More →

ரொரன்ரோ மல்வேர்ன் பகுதியில் நேற்று ஞாயிறுக்கிழமை இரவு 10:20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Tapscott வீதி மற்றும் Washburn Way பகுதியில் அமைந்துள்ள Lester B. Pearson உயர்நிலை பாடசாலைக்கு அருகாமையில் நேற்றிரவு தலையில் சுடப்பட்ட நிலையில் உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது கொல்லப்பட்டவர் 21 வயதான வினோஜன் சுதேசன் (Venojan Suthesan) என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குRead More →

மே 27ஆம் நாள் ஞாயிறு மாலை மூன்றாவதும் இறுதியானதுமான கட்சித் தலைவர்கள் விவாதமும் நடந்து முடிந்துவிட்டது.  எவரும் பாரிய தவறெதெனையும் செய்யவில்லை என்றே கூறலாம். சனி முதல் முற்கூட்டிய வாக்களிப்பில் மக்களும் வாக்களிக்க ஆரம்பித்துவிட்டனர். இன்னும் 10 நாட்களில் இறுதி வாக்களிப்பு. லிபரல் கட்சியைப் பொறுத்தவரை இத் தேர்தலில் பெரும் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. அதன் தற்போதைய ஒரே இலக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதல்ல. குறைந்தது 12 ஆசனங்களையாவது பெறுவது.Read More →

ரொறன்ரோவில் East York பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (சனிக்கிழமை) பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் அதிகாலை 2.15 மணிக்கு வழங்கிய தகவலின் அடிப்படியில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீட்டில் (41) வயதுடைய பெண் தனிமையில் இருந்த போது ஜன்னல் வழியாக நுழைந்த நபர் ஒருவர் அவரை கொலை செய்திருக்கலாம்Read More →

பற்றிக் பிரவுன்க்கு எதிரான ஒன்டாரியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் தலைமையின் முக்கிய குற்றச்சாட்டு – அவர் ஒரு வயது குறைந்த உயர்நிலைப் பள்ளிப் பெண்ணுக்கு மதுபானம் வழங்கினார் என்பது உண்மை இல்லை – CTV News இப்போது ஒப்புக் கொள்கிறது. குறித்த பெண் Barrie உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாணவியாக இருந்தபோது, ​​தேசிய கன்சர்வேடிவ் எம்.பி. யாக இருந்த பற்றிக் பிரவுன் ஒரு மதுபான விடுதியில் இருந்து தன் வீட்டிற்கு அழைத்துச்Read More →

கனடா ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சமபவத்தின் பின்னர் தலைமறைவான குற்றவாளிகள் குறித்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் கனடாவில் பிரபல பாடகர் டிரேக்குடன் இணைந்து உணவு விடுதி ஒன்றை ஆரம்பித்த 28 வயதான ஜாக்ஸன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குற்றவாளிகள் தொடர்பில் காணொளியை வெளியிட்டுள்ளனர். குறித்த இளைஞரை கருப்பு நிறRead More →

மிசிசாகா குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளியை வெளியிட்டுள்ள பொலிஸார், இதன் மூலம் அவர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், குறித்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலுக்குரிய எவ்வித அடையாளமும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோ நகருக்கு அருகே ஒன்றாரியோவில் உள்ள மிசிசாகா, பாம்பே பெல் எனப்படும், இந்திய உணவகமொன்றிலேயே நேற்று முன் தினம் (வியாழக்கிழமை)Read More →