வீட்டு வசதி என்பது கனேடிய சட்டத்தின் கீழ் அடிப்படை மனித உரிமையாக பிரகனப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 170இற்கும் மேற்பட்ட சிவில் சமுhதாய குழுக்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். குறித்த குழுவினரால் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், லிபரல் அரசாங்கத்தின் 10 ஆண்டு, 40 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேசிய வீட்டு மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கு ஏற்படுத்தப்படவுள்ளRead More →

2018 ஆம் ஆண்டுக்கான உலகில் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியலில் கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்கரி, 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இப் பட்டியலானது, நிலையான தன்மை, சுகாதாரப் பராமரிப்பு, கலாசாரம், சுற்றுச்சூழல், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டது. அந்தவகையில் அதில் 140 தகுதிவாய்ந்த நகரங்ளுக்கான தர வரிசை வழங்கப்பட்டது. அதில் 97.5 சத விகிதத்தை பெற்று கல்கரி 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அந்த பட்டியலில்Read More →

சவுதி அரேபியாவில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கனேடியர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக The Saudi Gazette வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 நாடுகளை சேர்ந்த 999 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகமான சந்தேகநபர்கள், சீனா, எரிட்ரியா, ரஷ்யா, இலங்கை, ஓமன், கிர்கிஸ்தான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏமனை சேர்ந்த 365 உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுடன் தொடர்பு, தேசியRead More →

வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால், கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கும் மேலும் வரியினை விதிக்க வேண்டிய சூழல் உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மெக்சிக்கோவுடன் வர்த்தக இணக்கப்பாடு இலகுவாக எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் ஏராளமான பயன்களை அடைய முடியும் என, அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையிலேயே , கனடாவிற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில்Read More →

வியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணத்தை குறைக்க, முன்னணி கடன் அட்டை நிறுவனங்கள் உடன்பட்டுள்ளதாக, மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை, நிதி அமைச்சர் பில் மொர்னியு, சிறு வணிகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு புதிய அமைச்சரான மெரி என்ஜி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிறிய மற்றும் மத்திய தர நிறுவனங்கள் வருட மொன்றிற்கு கிட்டத்தட்ட 250 மில்லியன் டொலர்கள் வரை சேமிக்க உதவக்கூடிய வகையில், கடன் அட்டை நிறுவனங்கள் தன்னார்வமாக உதவ ஒட்டாவாவுடனானRead More →

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் நேற்று(வெள்ளிக்கிழமை) புதிய காட்டுத்தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக ஏற்பட்டுள்ள இந்த 39 காட்டுத்தீ பரவல் சம்பவங்களுடன் சேர்த்து, தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 476 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை காலப்பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,565 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதனால் 1,180 சதுர கிலோமீடடர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.Read More →

கிழக்கு கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளுார் நேரப்படி காலை 7 மணியளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்தவர்களில் இரண்டு பொலிஸாருக்கும் அடங்குவதாக நியுவ் ப்ரவுன்ஸ்விக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதுவரையில் துப்பாக்கி பிரயோகம் தொடர்பான முழுமையானRead More →

கனடாவின் மேற்கத்தேய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்டவிரோத தீ பாசறை களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு அதிகாரம் அபராதம் விதித்துள்ளனர். அதன்படி, கடந்த வார இறுதி நாட்களில் மாத்திரம் 48 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் அபராதத் தொகை பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 460இற்கும் மேற்பட்ட காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்ற நிலையில், களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபடும் மக்களின் இவ்வாறான செயற்பாடுகளினால்Read More →

துப்பாக்கி வன்முறைகள் மற்றும் குழு மோதல்களை எதிர்த்து போராடுவதற்காக ரொறன்ரோ பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கத்தினால் 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. சமீப காலமாக அதிகரித்துவரும் வன்முறைகளை சமாளிக்கும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை கொண்டு இந்த வன்முறைகளுக்கான மூல காரணங்களையேனும் கண்டறிய முடியவில்லை என பலரும் இந்த நடைமுறையைRead More →

மனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு கனடா ஒருபோதும் பின்வாங்காதென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சவூதிய அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டிய கனேடிய பிரதமர், உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளை அவதானித்த வண்ணமுள்ளதாகவும் உரிமை மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதனை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார். நேற்று (புதன்கிழமை)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர்,Read More →