துப்பாக்கி வன்முறைகள் மற்றும் குழு மோதல்களை எதிர்த்து போராடுவதற்காக ரொறன்ரோ பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கத்தினால் 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. சமீப காலமாக அதிகரித்துவரும் வன்முறைகளை சமாளிக்கும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை கொண்டு இந்த வன்முறைகளுக்கான மூல காரணங்களையேனும் கண்டறிய முடியவில்லை என பலரும் இந்த நடைமுறையைRead More →

மனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு கனடா ஒருபோதும் பின்வாங்காதென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சவூதிய அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டிய கனேடிய பிரதமர், உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளை அவதானித்த வண்ணமுள்ளதாகவும் உரிமை மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதனை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார். நேற்று (புதன்கிழமை)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர்,Read More →

சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இரு முதியவர்கள், ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நெடுஞ்சாலை 781 பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் SUV வாகனத்தில் பயணித்த 39 வயதுடைய ஆண் மற்றும் 5 வயதுடைய குழந்தை ஒன்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக றோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,Read More →

கனடாவிற்கான தனது பயணிகள் விமான சேவைகளை நிறுத்துவதாக சவுதி எயர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவிற்கும், சவுதி அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகல் நிலையின் எதிரொலியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) காலை தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக சவுதி எயர்லைன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதியுடன் கனடாவுக்கான மற்றும் கனடாவிலிருந்து புறப்படும் தமது அனைத்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சவுதி எயர்லைன்சின் இந்தRead More →

கனடாவில் வசித்து வந்த சீக்கியர், 19 வயதான ககன்தீப் சிங் தாலிவால் தமது நெருங்கிய உறவினர் ஒருவருடன் வெளியே புறப்பட்டு சென்றபோது அங்கு வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அப்போட்ஸ்போர்ட் பொலிஸார் இது தொடர்பாக குறிப்பிடுகையில், “ஞாயிறு இரவு 11.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ககன்தீப் சிங் தாலிவாலை பரிசோதித்தRead More →

இன்று தமிழ் தமிழ் என்று தமிழனை நம்பவைத்து நாடகமாடி, தக்க சமயத்தில் தலையறுத்த கலைஞர், தனது குடும்பத்துக்கு சொத்தையும், பழியையும் சேர்த்துவைத்துவிட்டு இறந்துவிட்டார். முள்ளிவாய்க்கால்  இனவழிப்பின்  துரோகத்தின் பங்காளி கலைஞர் கருணாநிதி. ஆனால், அவருக்கே உரிய அகடவிகட சாதுர்யத்தாலும், நஞ்சினை உள்ளே வைத்து, தேனினும் இனிய சொற்களை வர்ணனை ஆக்கி எழுதியும், பேசியும் வந்த சாமர்த்தியத்தாலும், அவர் தன்னைப்பற்றி மக்களிடம் உருவாக்கி வைத்து இருந்த நம்பிக்கையும், மதிப்பும், உலக தமிழர்Read More →

கனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் குறித்த புகைப்படத்தை அடுத்த சில மணி நேரத்தில் சவுதி அரேபியா அரசு நீக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. கனடா அரசு சவுதி அரேபியாவின் உள்விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதாக கூறி, சவுதிக்கான கனேடிய தூதரை அந்த நாடு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனக் கூறியிருந்ததுடன், கனடாவில் சவுதி அரேபியாவுக்கான தூதரையும்Read More →

கனடாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் கிட்டியும் தமது நாட்டு மாணவர்களை அங்கு அனுப்புவதற்கு சவுதி அரேபியா மறுத்துள்ளது.  இதுகுறித்து சவுதி அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலான்ட் தெரிவித்துள்ளார். கனடாவுடனான கல்வி நிகழ்ச்சி பறிமாற்றும் திட்டத்தினை சவுதி அரேபியா இடைநிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், அதற்காக அந்நாடு வெட்கப்பட வேண்டுமென நேற்று (திங்கட்கிழமை)  கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். உயர்கல்வியில்Read More →

வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்றுபேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பிரம்டன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பிரம்டனுக்கும் வோனுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில், நெடுஞ்சாலை 50 மற்றும் Countryside Drive வீதிச் சந்திப்பில் நேற்று இரவு ஒன்பது மணியளவில், SUV ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த உயிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 47 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,Read More →

ரொரன்ரோ உள்ளிட்ட பெரும்பாலான ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் இன்றும் நாளையும் அதிக அளவிலான வெப்பநிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அந்த வெப்ப எச்சரிககையில், ஞாயிற்றுக்கிழமை ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களை நோக்கி ஈரப்பதனுடன் வெப்பமும் கூடிய காற்று நகரும் எனவும், நாளை திங்கட்கிழமை வரையில் அது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்களிலும் ஈரப்பதனின் அளவுRead More →