ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமை மற்றும் சிறிலங்கா அரசின் தமிழ் இனஅழிப்பு எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு வரும் மே 5 மற்றும் 6 இரு நாட்களாக கால்ற்றன் பல்கலை கழகத்தில் இடம்பெறுகிறது. உலகில் பல பாகங்களிலிருந்து புகழ் பெற்ற இருபத்தைந்திட்கும் மேலான புலமைசார் அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்கிறார்கள். 1999 இல் ஒட்டாவாவில் நடைபெற்ற முதலாவது மாநாட்டின் தொடர்ச்சியாக கடந்த 20 வருட காலRead More →

கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமது பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை காலமும் தகவல்களை வெளியிடாமல் இருந்தமைக்கான காரணத்தை யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 37 வயதான கிருஷ்ணகுமார் கனகரட்ணம் கொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அவர் கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்தார். எனினும்Read More →

சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து தப்பி கொலை வெறியனின் கையில் அகப்பட்டு கனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம். கனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட அவனது கொலை வெறிக்கு பலியான 8வது நபராக மேலும் ஒரு ஈழத்தமிழர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய கிருஸ்ணகுமார் கனகரத்தினமே கொலையுண்ட 8வது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொலையுண்டவர்களில் ஒருவராக 40Read More →

ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி வந்த எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து, கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் தற்போது பிரிடிஷ் கொலம்பியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊடகங்கள், குறித்த கப்பலில் தற்போது மிருகங்கள் வசிப்பதாக தெரிவித்துள்ளன. எனினும், அந்த கப்பலை என்ன செய்வது என்பது குறித்து அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், 492Read More →

‘தமிழர் தலைவிதி தமிழர் கையில்’ எனும் முழக்கத்துடன் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது மக்கள் அரங்கம் கனடாவின் ரொறன்ரோ பெருநகரில் இடம்பெறுகின்றது. ஈழத்தமிழ் மக்களின் அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பே சிறந்த பொறிமுறையாக அமையும் என்ற நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை ( Yes To Referendum ) உருவாக்கியிருந்தது. ஐ.நாவின் மேற்பார்வையில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்களிடத்தில், அவர்களே தமது அரசியற் தலைவிதியைத்Read More →

தமிழ்நாட்டில் ஸ்டர்லைட் பிரச்சனைக்கு எதிராக கனடா வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். டொரோண்டோவில் உள்ள இந்திய துணை தூதுவராலயத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், “எங்கள் சுவாசம். அசுத்தம் செய்யாதே” என்ற வாசகங்கத்தைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டர்லைட் நிறுவனம் அசுத்தத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.Read More →

Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள Ontario மாகாண தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். Markham Thornhill தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் Juanita Nathan போட்டியிடுகின்றார். Scarborough Rouge Park தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் Sumi Shan போட்டியிடுகின்றார். இந்த இரண்டு தொகுதிகளிலும் PC கட்சியின் வேட்பாளர்களாகRead More →

மாவீரர்களுக்காக முள்ளிவாய்க்கால் முற்றத்தினை இந்தியாவில் நிறுவுவதற்கு பத்து ஏக்கர் நிலம் வழங்கி முன்னின்று உழைத்த தமிழ் பற்றாளரும், ஈழத்தமிழர் மீது அதீத பாசமும் கொண்ட இலக்கியவாதியான முனைவர் அ. நடராஜன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுரோ தமிழிசைக் கலாமன்றத்தில் கனடா தமிழ் வானொலி அறிவிப்பாளரும், கனடிய தமிழர் தேசிய அவையின் ஊடகப்பேச்சாளருமான தேவா சபாபதி தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் கல்விமான்கள், கனடிய பொது அமைப்பின் பிரதிநிதிகள்,Read More →

கடந்த சனிக்கிழமை [March 10, 2018] நடைபெற்ற ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாதக்கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான கட்சியின் ஒன்றுகூடல் முடிவை அறிவிக்காமலே கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் முடிவிற்கு வந்தது. பின்னர் முழுமையான விபரங்;கள் அற்றே முடிவு ஒன்று அறிவிக்கப்பட்டது. எவ்வித அறிவிப்புமின்றி ஐந்தரை மணித்தியாலங்கள் தொடர்ந்த நேரலைகளில் பல விடயங்கள் வதந்திகளாகவே பேசப்பட்டன. பகிரப்பட்ட பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவையாக அமைந்தன. சி.பி.சி ஆக இருக்கட்டும் சி.ரி.வியாக இருக்கட்டும். சிற்றிRead More →

ரொறன்ரோவின் புகழ்பெற்ற தவில் கலைஞர் அ. மனோகரன் (அண்ணாமலை மனோகரன்) காலமானார். மட்டக்களப்பு அரசடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவில் கலைஞர் அண்ணாமலை மனோகரன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார். ரொறன்ரோவில் திறமையால் புகழ்பெற்ற கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் கலைஞர் மனோகரன். அன்னாருக்கு எம் இறுதி வணக்கம்.Read More →