கனடாவில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்.24 வயதான இவர் கனடாவின் Oshawa பகுதியில் உள்ள Durham கல்லூரியில் MBA படித்து வந்துள்ளார். படிப்பிற்கு இடையே அவர் பகுதி நேர வேலையாக பிட்சா கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு நவீன் பயணித்த காரும், மற்றுமொரு கார மோதுண்டதனாலேயே இந்தRead More →

அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் இன்று (திங்கட்கிழமை) நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இதன்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிநேகபூர்வ சந்திப்பாக இச்சந்திப்புRead More →

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று (வியாழக்கிழமை) நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை, இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேசRead More →

ரொறன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை தெரிவு செய்ய மக்களிடையே கடும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்க இருப்பதால், யாருக்கு வாக்களிப்பது என்று தமிழ் மக்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் வாக்குகள் சிதறடிக்கப்படலாம் என்ற அச்சமும் ஏற்ப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையை தவிர்க்கும் பொருட்டு கனேடிய தமிழ்Read More →

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ரோறன்ரோ மாகாணத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி எனக்கூறும் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் நோக்கிலேயே, மாகாவலி அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகள் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன், அரசாங்கம் உடனடியாக குறித்த திட்டத்தினை கைவிட வேண்டும் எனவும், இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புRead More →

Gary Anandasangaree

கனடிய பாரம்பரிய மற்றும் பன்முக அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். கனடியப் பிரதமர் Justin Trudeau இ்ன்று (வெள்ளி) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Scarborough Rouge Park தொகுதியின் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி கனடாவில் நாடாளுமன்ற செயலாளராக பதவி ஏற்கும் முதல் தமிழர் என்ற பெருமையை பெறுகின்றார். Gary Anandasangaree appointed Parliamentary Secretary Gary Anandasangaree hasRead More →

மார்க்கம் தொகுதி 7இல் உங்கள் ஆதரவு யாருக்கு? Ward – 7 in Markham; whom you support? நடக்கவிருக்கும் ஒண்டாரியோ நகரசபை தேர்தலில், மார்க்கம் தொகுதி 7 இல் 5 தமிழர்கள் போட்டியிடும் நிலையில் உங்கள் ஆதரவு யாருக்கு??. இந்த வாக்களிப்பு August 19, 2018 நிறைவடைத்துவிட்டது.Read More →

இன்று தமிழ் தமிழ் என்று தமிழனை நம்பவைத்து நாடகமாடி, தக்க சமயத்தில் தலையறுத்த கலைஞர், தனது குடும்பத்துக்கு சொத்தையும், பழியையும் சேர்த்துவைத்துவிட்டு இறந்துவிட்டார். முள்ளிவாய்க்கால்  இனவழிப்பின்  துரோகத்தின் பங்காளி கலைஞர் கருணாநிதி. ஆனால், அவருக்கே உரிய அகடவிகட சாதுர்யத்தாலும், நஞ்சினை உள்ளே வைத்து, தேனினும் இனிய சொற்களை வர்ணனை ஆக்கி எழுதியும், பேசியும் வந்த சாமர்த்தியத்தாலும், அவர் தன்னைப்பற்றி மக்களிடம் உருவாக்கி வைத்து இருந்த நம்பிக்கையும், மதிப்பும், உலக தமிழர்Read More →

இது தேர்தல் காலம். வாக்கு கேப்பவர் வாசலில் வருவர்.  வந்து நின்றொரு கும்புடு போடுவர்.  தாக்கு தாக்கென மற்ற வேற்பாளரை தாக்கி உங்கள் வாசலிலேயே சன்னதம் கொள்ளுவர். இதில் நிறைய முகங்களை நீங்கள் எந்த பொது, சமூக நிகழ்வுகளிலும் கண்டிருக்க வாய்ப்பில்லை.  இந்த தேர்தலில் தோற்றால் இனிமேலும் காணப்போவதில்லை. தேர்தல் முடியும் வரை பகலில் உங்களால் நிம்மதியாக வீட்டில் உறங்க முடியாது, எந்த வேளையும் உங்கள் வாசல் கதவு தட்டப்படலாம். Read More →

துப்பாக்கி மற்றும் போதைப் பொருள் கடத்தல் உட்பட 20 குற்றச்சாட்டுக்களில் தமிழர் உட்பட இருவர் கைது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி குறித்த ரொறன்‌ரோ காவல்துறையினரின் விசாரணையில் 19 வயதான  சுஜன் பாலசுப்ரமணியம் (Sujan Balasubramaniam) மற்றும் 22 வயதான Jaspal Bhatti என்பவரும் இதே குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்கள். ஒவ்வொருவரும் ஹெரோயின் (powder cocaine) மற்றும் மரிஜுவானா (marijuana) கடத்தல் துப்பாக்கிச் சூடு மற்றும் கவனக்குறைவாக நாசகார ஆயுதங்களை சேமித்துRead More →