ரொரன்ரோவில் நேற்றைய நாள் கடுமையான சுற்றிவளைப்பு தேடுதல்களை நடாத்தியுள்ள காவல்துறையினர், 70 பேரைக் கைது செய்துள்ளனர். 800 அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் தொடர்புகளைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் தெருச் சண்டியர் குழுக்களைச் சேர்ந்த பலர் சிக்கியுள்ளதாக காவல்துறைத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து மேலும் விபரம் தெரிவித்துள்ள ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க்Read More →

ரொறன்ரோ பகுதில் வசித்து வந்த (PhD) மாணவி ஒருவர் கடந்த மாதம் காணாமல் போனதை அடுத்து நயாகரா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 30 வயதுடைய ஜாபியா அப்சல் என்ற பெண்ணே என்றும், இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஒண்டாரியோ ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் யார்க் பல்கலைக்கழகதின் மாணவி என்றும் இவரை கடந்த மே மாதம் 10 திகதியை இறுதியாகRead More →

கஞ்சாவை பயன்படுத்துவதற்காக சட்டப்பூர்வமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செனட் சபையில் 52- 29 என்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. கடந்த 2001 ஆண்டு கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உற்சாகத்திற்காகவும் கஞ்சா அனுமதிக்கப்படும் என தெரிவித்ததுடன், 18 வயதுக்கு கீழ்உள்ளவர்கள் 30 கிராம் வரைRead More →

எதிர்வரும் நகரசபை தேர்தலில் நகராட்சி வேட்பாளர் ஆக விருப்பமா? என்ன தகுதி வேணும். எப்படி வேட்பாளர் ஆவது, வெல்வது எப்படி. நிதியை பெறுவது எப்படி. சரியான ஒரு பிரச்சாரத்தை நடத்துவது எப்படி? எதிர்வரும் ஜூலை மாதம் 27ம் திகதி மாலை 2 மணிவரை உங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். நீங்கள் மார்க்கம் நகரசபையில் பதிவு செய்யப்பட்ட வேட்பாளரா? அல்லது வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வமா? அல்லது எதுவுமே தெரியாதா. எல்லோரும்Read More →

ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 சிறுமிகள் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை, 11 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மைதானத்திற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வெளியே காரில் வந்த ஒருவர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளார். முதியவர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கி சூட்டில் 2 சிறுமிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மார்க்கம் பகுதியை சேர்ந்த ஷெல்டன்Read More →

ஒன்ராறியோ லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவராக ஒட்டாவா தொகுதி சடடமன்ற உறுப்பினரான ஜோன் ஃபிரேய்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தலைவராக இருந்த கதலின் வின் அந்த பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய இடைக்காலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஒட்டாவா தொகுதி சடடமன்ற உறுப்பினரான ஜோன் ஃபிரேய்சரை இடைக்காலத் தலைவராக முன்மொழிந்ததை அடுத்து,Read More →

அமையவிருக்கும் ஒன்ராறியோ மாநில சட்டமன்றில் லிபரலுக்கு உத்தியோகபூர்வ கட்சித் தகுதியை டக் ஃபோர்ட் வழங்குவார் என்று ஒன்ராறியோ மாநிலத்தின் முன்னால் முதல்வர் கதலின் வின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்று முடிந்த தேர்தலில், பெருமளவான தொகுதிகளை இழந்துள்ள லிபரல் கட்சி, ஆட்சி அதிகாரத்தை மட்டுமின்றி, உத்தியோகபூர்வ கட்சித் தகுதியையும் சட்டமன்றில் இழந்துள்ளது. இதனை அடுத்து இதுவரை கட்சித் தலைவராகவும் ஒன்ராறியோ முதல்வராகவும் பதவி வகித்துவந்த கத்தலின் வின் தனதுRead More →

ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 சிறுமிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மாலை 11 ற்கு மேற்பட்ட சிறுவர்கள் மைதானத்திற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வெளியே காரில் வந்த ஒருவர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 5 மற்றும் 9 வயது சிறுமிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில்Read More →

கனடாவில் கஞ்சா விற்பனை செய்வதற்கு அரசு இன்று (புதன்கிழமை) சட்டமூலத்தினை அமுல்படுத்தியதனால் கனடாவில் வாழும் மக்கள்  கவலையினை வெளிப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் சிறுவர்களும் இளைஞர்களும் கெட்டுபோய்விடுவார்கள் எனவும் கஞ்சாப் பாவனையின் குறுகிய மற்றும் நீண்டகால விளைவுகளைப் பார்க்கும்போது மார்புப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானம் போன்றவற்றை போலவே கஞ்சாவும் சர்வதாரணமாகக் கிடைக்கும். ஆகவே இது மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்குமெனவும் அவர்கள்Read More →

ஒன்ராறியோ மாநிலத்திற்கு கடந்த 7ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த லிபரல் கட்சியிடம் இருந்து டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சுமூகமான ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு 3 வாரங்கள் வரையில் ஆகக்கூடும் எனவும் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். மத்திய அரச மட்டத்தில் செயற்படுபவர்களின் உதவியுடன் இந்தப் பணிகள்Read More →