ஸ்காபரோவின் மால்வேர்ன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவனின் உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் நீல்சன் வீதி மற்றும் டேப்ஸ்காட் வீதிப் பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்தார். இதனைதொடர்ந்து, குறித்த சிறுவன் உடனடியாகவே சணிபுரூக் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். குறித்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் போது உயிராபத்தான நிலையிலேயே இருந்ததாகவும், தற்போது உடல்Read More →

பிரித்தானிய இளவரசர் ஹரியை காதலித்த காலத்தில், அமெரிக்க நடிகையான மேகன் மாக்கிலின் வசித்த கனேடிய வீடு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இயற்றப்பட்ட ‘சுயிட்ஸ்’ நாடக தொடரில் நடித்து வந்த போது, பாதர்ஸ்ட் பகுதியில் நடிகை மேகன் மாக்கிலின் குடியிருந்த வீடே தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. யார்மத் வீதி பகுதியிலுள்ள மேகன் மெர்க்கல் வசித்துவந்த வீடு இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள் மற்றும் இரண்டுRead More →

Daniel Jean

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதவி விலகலுக்கும் பிரதமரின் இந்தியப் பயண விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ரூடோ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்ததையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டானியல் ஜீனின் பதவி விலகுவதாக கூறியது பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதவி விலகலுக்கும்Read More →

கனடாவில், ஒன்டோரியோ மாகாணத்தின்,ப்ரோக்ரேஸ்ஸிவ் கான்செர்வ்டிவ் பார்ட்டி (PC) கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மிச்செல் ஹாரிஸ் (Kitchener-Conestoga MPP Michael Harris) மீது எழுந்த பாலியல் சீண்டல் புகாரையடுத்து கட்சி உறுப்பினர் கூட்டத்திலிருந்து (caucus) நீக்கப்பட்டார். வெளியிடப்பட்ட செய்தியின் படி,பாதிக்கப்பட்ட பெண் மிச்செல் ஹாரிஸின் கீழ் பணியில் இருப்பவர், இவருக்கு தொடர்ந்து அலைபேசி குறுஞ்செய்தி மூலம் பாலியல் சீண்டல் செய்ததற்கான சான்றுகளோடு சிக்கியிருக்கிறார். இதனால் இவர் கட்சி பதிவியிலும் இருக்கRead More →

பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த ஜுனியர் ஹொக்கி வீரர் ஹம்போல்ட் புரொன்கோஸ் (Humboldt Broncos) தனது உடலுறுப்புக்களைத் தானம் செய்துள்ளமை கனடா மக்களிடத்தில் நெகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது முன்மாதிரியைப் பின்பற்றி இதுவரை 182 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடலுறுப்புத் தானம் செய்துள்ளதாக கனடா அதெிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரது உடலுறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் அவருக்கு நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேவேளை யாரும் எதிர்பாராத திருப்பமான கடந்த இரு வாரங்களுக்குள்Read More →

கனடாவிற்குள் கடந்த வார இறுதியில் மட்டும் 600 இற்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக கனடிய எல்லை பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள், அமெரிக்க – கனடிய கியுபெக் எல்லையின் வழியாக கனடாவிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்க குடிவரவு கொள்கைக்கு பயந்தே இவர்கள் கனடாவிற்குள் நுழைவதாக அண்மைய கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் நைஜிரியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. சிலி நாட்டை சேர்ந்த 14 பேர் கொண்ட கும்பல் ஒன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலினால் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிலி நாட்டைச் சேர்ந்த 14Read More →

புதிய அதிவேக ரயில் சேவை ஒன்று ரொறொன்ரோவிற்கும் லண்டனிற்கும் இடையில் 2025ல் ஆரம்பமாகும் என ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் தெரிவித்துள்ளார். இச்சேவைக்கு சமீபத்திய மாகாணத்தின் வரவு செலவு திட்டத்தில் 11பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 10-ஆண்டுகள் முதல் கட்ட வேலை திட்டத்திற்காக இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்டம் யூனியன் நிலையத்தையும் லண்டன் ஒன்ராறியோவையும் 73நிமிடங்களில் இணைக்கும். இத்திட்டம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தாது. ஆனால் மக்கள் வசிப்பதற்கும் தெரிவுRead More →

ஐஸ் ஹொக்கி வீரர்கள் பயணித்த பேருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் குறித்த வாகனங்கள் சஸ்கச்சுவான் மாநிலத்தின் குரோன்லிட் எனப்படும் பகுதியில், நெடுஞ்சாலை 335 இல் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போது இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. சாரதி உட்பட பேருந்தில் 28 பேர் பயணித்திருந்த நிலையில், அவர்களில் 14 பேர் உயிரிழந்து விட்டதாகவும், ஏனைய 14Read More →

TTC போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும், வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்தோருக்கு, போக்குவரத்துக் கட்டணத்தில் சிறப்புக் கழிவு வழங்கப்படும் புதிய திட்டம் ஒன்று நேற்றிலிருந்து (April 04, 2018) நடப்பிற்கு வருகின்றது. ஒன்ராறியோ தொழிலாளர்கள் திட்டம் அல்லது ஒன்ராறியோ உடற்குறைபாடுடையோர் ஆதரவுத் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுவோர், இந்த புதிய பயணக் கட்டணக் குறைப்புத் திட்டத்தின்கீழ் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. புதன்கிழமையிலிருந்து நடப்புக்கு வரவுள்ள இந்த திட்டத்தின் கீழ், நாளாந்த மற்றும்Read More →