நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த York-Spadina நிலக்கீழ் தொடரூந்து பாதை விரிவாக்கத்திற்கான திறப்பு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. ரொரன்ரோவின் எல்லைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள முதலாவது நிலக்கீழ் தொடரூந்து நிலையமான இந்த York-Spadina நிலக்கீழ் தொடரூந்து பாதையின் விரிவாக்க திறப்பு விழாவில், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு, Vaughan Metropolitan CentreRead More →

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் கடந்த மாதத்தை விட நவம்பர் மாதத்தில் வீட்டு விலைகள் கிட்டத்தட்ட நான்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வருட இறுதியில் வீடுகள் விற்பனையாவது மந்த கதியிலேயே நகரும் என்ற போதிலும் நடப்பு வருடத்தின் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் வீடு வாங்குபவர்கள் அனைவரும் காப்பீட்டு அடமானங்களுடன் வீதங்கள் அதிகமாக இருப்பினும் இன்னமும் தங்கள் கடனை செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும்Read More →

ஒன்ராறியோவின் கிழக்கே, Tweed பகுதியில் நேற்று உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். Belleville இலிருந்து வடகிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்ராறியோ மின்சார வாரியமான ஹைட்ரோ வண் (Hydro One) பணியாளர்கள் சென்ற உலங்குவானூர்தியே விபத்துக்குள்ளானதாகவும், அதன்போது உயிரிழந்த நால்வரும் தமது பணியாளர்களே எனவும் ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது. குறித்தRead More →

ஒன்ராறியோ மகாணத்தின் Innisfil நகரில் பாடசாலை அமைந்திருந்த வீதியில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்துக்குப் பதிலாக மணிக்கு 102 கிலோமீற்றர் வேகத்தில் 22 வயதான பெண் ஒருவர் வாகனத்தைச் செலுத்தி காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். உடனடியாகவே சாரதிப்பத்திரமும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கிரிமினல் சட்டத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.Read More →

வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் குப்பை தொட்டியில், தவறான குப்பைகளை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது. மீள்சுழற்சிப் பயன்பாட்டுக்காக சேகரிக்கப்படும் தொட்டிகளினுள் அதற்குள் போடக்கூடாத ஏனைய குப்பைகளைப் போடுவதால் அதனைப் பிரித்து எடுக்க ரொறன்ரோ நகரசபையினருக்கு பல மில்லியன் டொலர்கள் செலவீனம் ஏற்படுவதாலேயே நகர நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் சேரும் குப்பைகள், உணவுத் துகள்கள் தனித்தனியான கொள்கலன்களில் வீட்டுக்கு வெளியே வைக்கும் பொழுது நகரசபை ஊழியர்கள்Read More →

ரொரன்ரோவின் வட பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் போது, 25 வயது ஆண் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டஃப்பிரின் வீதி மற்றும் மேஜர் மக்கென்ஸி டிரைவ் வெஸ்ட் பகுதியில் அமைந்துள்ள, றோயல் வங்கிக் கிளையில் நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், அங்கு ஆயுததாரி ஒருவர்Read More →

நியு யோர்க் ஏலமொன்றில் ஆயிரக்கணக்கான டொலர்களை பெற இருந்த ஓவியம் திருடப்பட்டதென கண்டு பிடிக்கப்பட்டது.  35 வருடங்களிற்கு முன்னர் இந்த ஓவியம் திருடப்பட்டுள்ளது. 19ம்நூற்றாண்டின் எண்ணெய் ஓவியம் ஒன்றை தாங்கள் ஏலத்தில் விட உள்ளதாக தெரிவித்தனர்.  மத்திய ஐரோப்பிய நாடான Czech ஐ சேர்ந்த அன்ரோனியெட்டா பிரென்டெய்ஸ் (ANTONIETTA BRANDEIS, Czechoslovakian, 1849-1910) என்பவரால் வரையப்பட்டது.  இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் துறைமுக நகரத்தின் சித்திரமாகும். ஏலத்தில் 10,000 டொலர்களிற்கு செல்லும்Read More →

25 பேருடன் பயணித்த விமானம் ஒன்று சாஸ்காச்சுவானின் வட பிராந்தியத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்குள்ள ஃபொன்ட் டூ லக் (FOND DU LAC) விமான நிலையத்தில் இருந்து நேற்று புதன் மாலை 6.15 அளவில் புறப்பட்ட அந்த விமானம், ஓடுபாதையில் இருந்து மேலழுந்து சிறிது நேரத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானம் வீழ்ந்துள்ளதாகவும், ஆரம்பகட்ட தகவல்களின்படிRead More →

இன்று அதிகாலை கார்டினர் அதிவிரைவுச் சாலையில், காவல்துறை வாகனம் ஒன்று பிறிதோரு வாகனத்தினால் மோதுண்டதில், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், சவுத் கிங்ஸ்வே வீதிப் பகுதியில், இன்று அதிகாலை 3.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றிற்கு உதவுவதற்காக சென்ற ரொரன்ரோ காவல்துறை உத்தியோகத்தர், தனது வாகனத்தை நிறுத்திய வேளையில், பின்புறமாக வந்த பிறிதொரு வாகனம், காவல்துறை வாகனத்தின்Read More →

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கனேடிய பெண் ஒருவர் பாகிஸ்தானில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கின் தீா்ப்பு அறிவிக்கப்பட்டது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 40 வயதான ராஜ்விந்தர் கவுர் கில் (Rajvinder Kaur Gill) என்ற பெண் தொழில் விடயமாக பாகிஸ்தான் லாகூரில் தங்கியிருந்துள்ளார். அங்கே வைத்து கவுரை கடத்திய மர்ப நபர்கள் அவரை கொலை செய்து கால்வாயில் தூக்கிRead More →