தான்யா அலென் ஒன்ராறியோ முன்போக்கு பழமைவாதக் கட்சியின் வேடபாளராக இனி இருக்கமாடடார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் நேற்றைய நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில விடயங்களில் அலெனின் குணாம்சங்கள் பொறுபபற்ற வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி பலவேறு விதமான பார்வைகளை கொண்ட மக்களின் தொகுப்பாக உள்ளது என்றும், அவ்வாறான மக்கள் தமது கருத்துக்களைRead More →

ரொறன்ரோ பாலத்திற்கு கீழ் தொங்கிக்கொண்டிருந்த கார், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டான் பள்ளத்தாக்கு பார்க்வே அருகே, உள்ள மைல்வுட் பாலத்திலேயே குறித்த கார் தொங்கிக்கொண்டிருந்தது. எனினும், குறித்த கார் தீயணைப்பு படையினரின் உதவியுடன் பத்திரமாக கீழிறக்கப்பட்டுள்ள போதும், ஏன் இந்த கார் பாலத்தில் தொங்கியது என பொலிஸார் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இனந்தெரியாதோர் இச்செயலை நகைச்சுவைக்காக செய்திருக்க கூடுமெனRead More →

தெற்கு ஒன்றாரியோ பகுதியில் வீசிய பலத்த காற்றில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை, சீர் செய்யும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) வீசிய பலத்த காற்றில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, சுமார் ஒரு இலட்சம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் பாதிக்கப்பட்டு இருளில் மூழ்கினர். தற்போது துண்டிக்கப்பட்ட பெரும்பாலான மின்சார சேவைகள் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு மிகவிரைவில் மின்சார சேவை வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

வட அமெரிக்காவில் பிரசித்திபெற்ற தமிழர் நிர்வாகத்தில் இருக்கும் Canbe உணவகத்தின் உணவு வகைகள் சில ஒவ்வாமை காரணமாக மீள பெறப்படுகின்றன. இது குறித்து கனடிய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஒவ்வாமை அபாயத்தின் காரணமாக Canbe Foodன் ரோல்ஸ் மற்றும் சமோசா உணவு பொருட்கள் மீண்டும் திரும்ப அழைக்கப்படுகின்றன. இது குறித்து கனடிய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிளாஸ்-2 வகையை சேர்ந்த ஆபத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தRead More →

மத்திய பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் (Gord Brown) நாடாளுமன்ற வளாகத்தில உள்ள அவரது அலுவலகத்தில் திடீரென உயிரிழந்தார். 57 வயதான இவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வந்துள்ளதுடன், 2004ஆம் ஆண்டில் முதற்தடவையாக நாடாளுமன்றுக்கு தெரிவு செயயப்பட்டு, அரசியலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் திடீரென உயிரிழந்தமை குறித்து கட்சித் தலைவர்கள் பலரும் தமது அனுதாபங்களைப் பகிர்நது வருகின்றனர். புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு மு்னனர்,Read More →

நோர்த் யோர்க் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ரொரன்ரோ நகரபிதா கருத்து வெளியிட்டுள்ளார். ரொரன்ரோவில் கடந்த வாரம் நபர் ஒருவர் சிற்றூர்தி ஒன்றினால் பாதசாரிகளை மேதி தாக்குதல் மேற்கொண்டதில் 10 பேர் பலியாதுடன், 16 பேர் படுகாயடைந்துள்ளமை குறி்ப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே குறித்த அந்த சம்பவத்தில் பலியானவர்களின் நினைவாக நிரந்தர நினைவகம் ஒன்றினை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். இந்தRead More →

கனடா – ஒன்றோரியோ பகுதியில் 30 ஆயிரம் டொலர் பெறுமதியான காசோலையை மோசடி செய்யப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் மார்ஷல் என்பவருக்கு அண்மையில் நிஸ்ஸான் டீலர்ஷிப் என்ற இடத்தில் இருந்து 30319.03 அமெரிக்க பெறுமதியான காசோலை ஒன்று வந்துள்ளது. குறித்த காசாலை தனது பெயருக்காகவும், முகவரிக்கும் எழுதப்பட்டுள்ளதை அவதானித்த டொனால்ட் அது தனக்கே வந்தது என நினைத்து அதனை பணமாக மாற்றி செலவு செய்துள்ளார்.Read More →

ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ரியா ஹோர்வத் விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெறவுள்ள ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதனைக் காட்டிலும், எந்த தலைவருக்கு அதிக மக்கள் வரவேற்பினைப் பெறுவார்கள் என்பதே முதன்மையாக உள்ளதனை அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. இந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்Read More →

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், ஹைட்ரோ கட்டணத்தை 12 சதவீதத்தால் குறைப்பதாக ஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் புதிய தலைவர் டக் ஃபோர்ட், உறுதியளித்துள்ளார். ஒன்ராறியோ சட்டமன்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வெற்றிபெற்றால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த கட்டணக் குறைப்பை பல்வேறு அளவுகளில் மேற்கொள்ள இருப்பதாகவும், அது சராசரியாக ஆண்டுக்கு 173Read More →

ரொறன்ரோ வாகன தாக்குதலில் உயரிழந்தவர்களுக்காக, பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கனடாவின் பொருளியல், வணிக மற்றும் கல்வி மையமாக விளங்கும் ரொறன்ரோவில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர். கனடாவில் மிகப்பெரிய வெகுஜன படுகொலை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தRead More →