Reading Time: < 1 minute கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அமைச்சரவைக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நாட்டில் நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு குறுகிய காலப் பகுதியில் நியமனங்களை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஹென்றி பிறவுண் இவ்வாறு பிரதமருக்கு உத்தரவிட்டுள்ளார். லிபரல் அரசாங்கம்; பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அசமந்தப் போக்கினைப் பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார். பதவி வெற்றிடங்களினால் மக்களுக்கு பாதிப்புRead More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கம் பலஸ்தீன தேசத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் லிபரல் கட்சியின் கூட்டணி கட்சியான என்.டி.பி கட்சி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் மூலம் மத்திய கிழக்கு சமாதான முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என என்.டி.பி கட்சியின் வெளிவிவகாரத்துறை பொறுப்பாளர் ஹீத்தர் மெக்பிர்சன் தெரிவித்துள்ளார். பலஸ்தீன தேசத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது குறித்த பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் –Read More →

Reading Time: < 1 minute கனடிய கலைஞர்களது வாழ்வாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு காரணமாக பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தங்களது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான சட்டங்களை அறிமுகம் செய்து தமது தொழிற்துறையை பாதுகாத்துக் கொடுக்குமாறு லிபரல் அரசாங்கத்திடம் கலைஞர்கள் கோரியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடான காணொளிகளினால் கலைஞர்களது பிரபல்யத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பொழுதுபோக்கு கைத்தொழிற்துறையில்Read More →

Reading Time: < 1 minute பனிப்பொழிவினால் நதிகளில் பனி படர்ந்துள்ள நிலையில் மக்கள் அதன்மேல் நடமாடி வருகின்றனர். இவ்வாறு நடமாடிய மூவர் திடீரென பனிப்பாறை உடைந்து நதியில் மூழ்கியுள்ளனர். இவ்வாறு நீரில் மூழ்கிய மூவரில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். ஏனைய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காலப் பகுதியில் பனிக்கட்டிகளின்மேல் நடப்பது ஆபத்தானது என பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் கார்ல்ஸ்டன் நதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஓரளவு வெப்பநிலை நிலவும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்ட நிலையில், பொலிசார் அவர் தொடர்பில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். சனிக்கிழமை மாலை 7.40 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அந்த வீட்டுக்குள் குல்தீப் சிங் (56) என்னும் நபர் இரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட பொலிசார், உடனடியாக அவரை மீட்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பணியிடங்களில் ஆண்கள் துன்புறுத்தப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பணியிடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 30 வீதமான ஆண் பணியாளர்கள் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். தொழில்களில் ஈடுபட்டு வரும் 50 வீதமான பெண்கள் பாலியல் அல்லது வேறும் வகையில் துன்புறுத்தல்களை அனுபவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 25 முதல் 34 வயது வரையிலான பணியாளர்களே அதிகளவில்Read More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கம் சில்லி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக அறிவித்துள்ளது. கனடிய தீயணைப்பு படையினரை அனுப்பி வைக்க உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தீயணைப்பிற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் சில்லி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீ பாதிப்புக்களின் போது சில்லி நாட்டு படையினர் உதவிகளை வழங்கியிருந்தனர். இந்த பெறுமதிமிக்க உதவிகளுக்கு பிரதி உபகாரமாக கனடிய தீயணைப்புப்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கனடாவின் மொனிற்றோபாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு பெண்களும் மூன்று சிறுவர்களும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மொனிற்றோபாவின் கார்மனின் அதிவேக நெடுஞ்சாலை வாகனமொன்று எரியுண்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தில் உள்ளிருந்தும் வாகனத்திற்கு அருகாமையில் இருந்தும் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்துடன்Read More →

Reading Time: < 1 minute செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பல கனயடியர்கள் பயன்படுத்துவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. கனடாவில் 30 விதமானவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர் இருந்த நிலையை விடவும் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலானவர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. 18 முதல் 34 வயது வரையிலான கனடியர்கள் அதிக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அன்றாடம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்Read More →

Reading Time: < 1 minute உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி பல நாடுகள் கல்வி அறிவில் முன்னிலை வகுக்கின்றன. அதன்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. கனடாவில் 59.96% படித்தவர்கள்.Read More →

Reading Time: < 1 minute ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஜோர்தான் மன்னர், நாளை மறுதினம் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். ஜோர்டான் மன்னரின் கனடிய விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு உதவிகளை வழங்குவதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் பலியான நிலையில், அந்த விபத்து தொடர்பான பல கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்ப்டன் நகரில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், இந்தியர்கள் மூவர் பலியாகியுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. அவற்றில் ஒன்றில், ரீத்திக் (Reetik Chhabra, 23), அவரது தம்பியான ரோஹன் (Rohan Chhabra, 22) மற்றும் அவர்களுடைய நண்பரானRead More →

Reading Time: < 1 minute ரஸ்யா போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக கனடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ரஸ்யாவின் போலிப் பிரச்சாரங்களுக்கு கனடியர்கள் ஏமாற மாட்டார்கள் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நாசிபடைகளுடன் தொடர்புடைய உக்ரைன் கனடிய பிரஜைக்கு கனடிய நாடாளுமன்றில் கௌரவிக்கப்பட்டமை குறித்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டிருந்தார். மேற்குலக நாடுகள் தொடர்பில் ரஸ்யா பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த பிரச்சாரங்களின் மூலம் கனடியர்களை முட்டாளாக்க முடியாது எனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தபால் திணைக்களம் இவ்வாறு கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உள்நாட்டு தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முதல் இவ்வாறு கட்டண அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒட்டோவாவில் இந்த ஆண்டில் இதுவரையில் 721 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் இவ்வாறு வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. இதன்படி நாளொன்றுக்கு ஆறு வாகனங்கள் என்ற அடிப்படையில் களவாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களில் சுமார் 45 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. கனடாவில் வாகன திருட்டை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசாங்கம் மாநாடு ஒன்றைRead More →

Reading Time: 3 minutes சில வருடங்களுக்கு முன்னர் எனது தாயார் தனது இறுதிக்காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் . அப்போது யாழ்ப்பாணத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வைத்திய நிபுணராக ஒரே ஒருவரே கடமையாற்றிக்கொண்டிருந்தார். அவரே எனது தாயாரையும் கவனித்துவந்தார். ஒருமுறை அம்மாவை அழைத்துக்கொண்டு வழமையான Check up இற்காக அவரிடம் சென்றிருந்தேன். அவுஸ்திரேலியாவிலே மருத்துவத்துறையில் அவரது நிபுணத்துவ மேற்படிப்பை முடித்தவர் அந்த மருத்துவர். பொதுவாக மேற்படிப்பிற்காக மேற்குலகு செல்லும் மருத்துவர்கள் படித்து முடித்ததும் அந்தநாடுகளில் விண்ணப்பித்துRead More →