கனடா உலகில் மிக மகிழ்ச்சியான நாடு தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ளது. உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்த வருடம் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வருடம் நோர்வே முதலிடத்தில் திகழ்ந்தது. ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கையிலேயே இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை, முன்னர் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் திகழ்ந்த டென்மார்க் தற்போது மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அத்துடன்,Read More →

கடந்த சனிக்கிழமை [March 10, 2018] நடைபெற்ற ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாதக்கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான கட்சியின் ஒன்றுகூடல் முடிவை அறிவிக்காமலே கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் முடிவிற்கு வந்தது. பின்னர் முழுமையான விபரங்;கள் அற்றே முடிவு ஒன்று அறிவிக்கப்பட்டது. எவ்வித அறிவிப்புமின்றி ஐந்தரை மணித்தியாலங்கள் தொடர்ந்த நேரலைகளில் பல விடயங்கள் வதந்திகளாகவே பேசப்பட்டன. பகிரப்பட்ட பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவையாக அமைந்தன. சி.பி.சி ஆக இருக்கட்டும் சி.ரி.வியாக இருக்கட்டும். சிற்றிRead More →

தேர்தல் முடிவுகளும், தற்போதய சம்பவங்களும், தாங்கள் இன்னமும் நிறையவே பணியாற்ற வேண்டியுள்ளது என்பதனை தெளிவாக எடுத்துக் கூறுவதாக ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக வெற்றி பெற்றுள்ள டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ள அவர், வரவுள்ள மாகாண சட்டமன்ற தேர்தலுக்கு முன்னராக நிறையவே பணிகளை ஆற்ற வேண்டியுள்ளதாகவும், சவால்கள் நிறையவே உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒன்ராறியோ மாநிலம்Read More →

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக Doug Ford தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிக நீண்ட நேர இழுபறியின்பின் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டீன் எலியோட், வழக்கறிஞரும் வர்த்தகருமான கரோலைன் முல்ரோனி, முன்னாள் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட், பெற்றோர் உரிமைகள் செயற்பாட்டாளர் தான்யா கிரானிக் அலென் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More →

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு நீக்கப்படுமானால் கனடாவின் பொருளாதாரம் 0.5 சதவீத வீழ்ச்சியைக் காணும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில் சம்பந்தப்பட்ட நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகியவை ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஒப்பந்தத்தை மீள மாற்றியமைப்பது குறித்த பேச்சுக்கள், எதிர்வரும் கிழமைகளில் எட்டாவது சுற்றினை எட்டவுள்ளது. இந்த நிலையில் NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தகRead More →

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் அவ்வளவு ஒன்றும் உவப்பானதாக இல்லை.Read More →

ஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி, பின்னர் மீண்டும் அதே தலைமைத்துவத்திற்கான போட்டியில் குறித்துள்ள பற்றிக் பிரவுன், மிசிசாகாவில் தனது பரப்புரை நடவடிக்கையை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், இந்த கட்சியை என்றும் இல்லாத அளவு உயர்ந்த நிலைக்கு வளர்த்தெடுத்தவர் என்ற அடிப்படையில், தானே கட்சிக்கு தலைமை தாங்குபவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனவரி மாதத்தில் பற்றிக் பிரவுனால் கட்சி உறுப்பினர்கள்Read More →

மோர்னிங்சைட் பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்றில் கார் ஒன்று மோதுண்டு மிக மோசமாக சேதமடைந்துள்ள நிலையில், அதன் சாரதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எல்ஸ்மெயர் வீதி மற்றும் நெய்ல்சன் வீதிப் பகுதியில் நேற்றுக் காலை எட்டு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை, அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில் அந்த வாகனத்தின் சாரதியை அங்கு காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த வாகனம் மிகவும் மோசமாக சேதமடைந்திருந்ததாகவும்Read More →

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் அவரது குடும்பத்தாரும் இன்று ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலைப் பார்வையிட்டுள்ளனர். இன்று காலை 9 மணியளவில் புது டெல்லியில் இருந்து ஆக்ரா நோக்கி வானூர்தி மூலம் புறப்பட்டுச் சென்ற அவர்கள், முற்பகல் 10.45 அளவில் தாஜ் மஹாலையும் அதன் சூழலையும் பார்வையிட்டுள்ளார். அதேவேளை இந்திய நேரப்படி இன்று மாலை டெல்லியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்புRead More →

அட்லான்டிக் கனடாவை இன்று மிக மோசமான பனிப்புயல் தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து பாகங்களிலும் பனியுடன் கூடிய காற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், சில வேளைகளில் அது மணிக்கு 140 கிலோமீட்டர் வரையில் செல்லக்கூடிய வாய்புகளும் உள்ளதாகவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பனிச் சூறாவளி என்று கூறப்படும் இந்த பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து இன்று கனடாவை வந்தடைவதாகவும்,Read More →