கனடாவின் நீதித்துறை நியமன செயல்முறை மாற்றம்: முன்னாள் பிரதமர் கடும் விமர்சனம்

கனடாவின் அண்மைய நீதித்துறை நியமன செயல்முறை மாற்றம் குறித்து கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் க்ரேஷியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கனேடிய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு காரசாரமாக தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர், கனடாவில் ஒரு மோசமான நீதிபதி இருப்பின், அதற்கு பிரதமரும், நீதியமைச்சருமே பொறுப்பு கூற வேண்டும்.

கனடாவில் நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக தீர்மானிப்பதற்கென நீதித்துறை ஆலோசனை குழுவொன்றை நியமிக்க ஆளும் லிபரல் கட்சி தீர்மானித்துள்ளது.

ஆனால், இதுவொரு சாத்தியமான தீர்மானமல்ல. இக்குழுவினர் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொள்வர். ஆனால் அதில் எவரும் தலையிட முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.

பிரெட் கெவனாக்கின் சர்ச்சைக்குரிய அமெரிக்க உச்சநீதிமன்ற நியமனத்தை தொடர்ந்தே கனேடிய முன்னாள் பிரதமரின் இவ்வாறானதொரு கடுமையான விமர்சனம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.