ரொறன்ரோ நகரசபை தேர்தல்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

ரொறன்ரோ நகரசபை தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் தொகுதி குறித்து அண்மையில் சில குழப்பங்கள் நிலவிய போதிலும், முற்கூட்டிய வாக்குப்பதிவுகளை அடுத்த வாரத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவிததுள்ளார்.

ரொறன்ரோ தேர்தல் தொகுதிகளைக் குறைப்பது தொடர்பில் மாகாண நிர்வாகத்திற்கும் ரொறன்ரோ நகர நிர்வாகத்திற்கும் இடையேயான முரன்பாடு நீதிமன்ற விசாரணையில் இருந்த போதிலும், 25 தொகுதியானாலும், அல்லது முன்னைய 47 தொகுதியானாலும் இரண்டுக்குமே தாங்கள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

47 ஆக இருந்த ரொறன்ரோ மாநரக தொகுதிகளை 25 ஆக குறைப்பதற்கான தீர்மானத்தினை ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட் கொண்டுவந்த போதிலும், அதனை ரொறன்ரோ நகர நிர்வாகம் எதிர்த்தமையால் இந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.