ரொறன்ரோவின் பில்லி பிஷப் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

கனமான மூடுபனி காலநிலை தொடர்கின்ற நிலையில், ரொறன்ரோவின் பில்லி பிஷப் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த காலநிலை காரணமாக விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானப் பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போர்ட்டர் எயார்லைன்ஸ் நேற்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

இருப்பினும் நாளை குறித்த விமான சேவைகள் வழமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் போர்ட்டர் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காலநிலை இரு நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.