GO Transit சேவையை விரிவுபடுத்தும் ஒன்றாறியோ அரசு!

ரொறன்ரோ மற்றும் ஹமில்டனில் உள்ளிட்ட பகுதிகளுக்கு GO Transit சேவையை விரிவுபடுத்த ஒன்றாறியோ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் குறித்த திட்டத்தை எதிர்வரும் வாரத்தில் இருந்து அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ரொறன்ரோவில் இருந்து லாக்சோர் வரையான போக்குவரத்து 18 விகிதமாக அதிகரிக்கப்பட்டு, அடுத்த வாரம் முதல் ஒரு வாரத்திற்கு 220 சேவைகளை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பலர் நன்மையடைவார்கள் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.