200 க்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவில்லை!

ரொறன்ரோவில் இந்த வருடம் முழுவதும் பல குற்றச்செயல்கள் அதிகரித்திருந்த நிலையில் சுமார் 200 க்கு மேற்பட்ட பொலிஸார் யூலை மதம் முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் தற்போது குற்றச்செயல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

குறிப்பாக இரவு வேளைகளில் கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனால் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களின் எண்ணிக்கையில் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியிருந்தார்.

இருப்பினும் கூடுதல் அதிகாரிகல் கடமையில் இருந்த போதும், டான்ஃபோர்ட் அவென்யூ, யார்க்டேல் மால், பகல்நேர பிளே சந்தை மற்றும் நகரில் உள்ள பல இடங்களில் தொடர்ந்தும் துப்பாக்கி சூடு இடம்பெற்றது.

குறிப்பாக, ரொறொன்ரோவின் பொலிஸ் இணையத்தளத்தில் கிடைத்த புள்ளி விபரங்களின்படி யூலை 20 முதல் செப்டெம்பர் 9 வரையான காலப்பகுதியில் ரொறன்ரோவில் சுமார் 65 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் சந்திப்பிலும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.