கனடாவின் தொடர்பாடல் செய்மதியை ஏந்திச்செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்ஸின் விண்கலம்

விண்வௌி ஆய்வுத்துறையில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் தனியார் நிறுவனமே ஸ்பேஸ் எக்ஸ். ரோபோவுடனான ‘டெஸ்லா ரோட்ஸ்டர்’ நான்கு சக்கர வாகனத்தை விண்ணில் பறக்கவிட்டு அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்த பெருமை அதன் நிறுவுனர் எலன் மஸ்க்கை (Elon Musk) சாரும்.

செவ்வாய் நோக்கிய அந்த பயணத்தை டெஸ்லா வாகனம் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்தது. இது மிகப்பெரும் சாதனை பயணமாக அமைந்ததுடன், பாரபட்சமின்றி அனைவர் மனதையும் நெகிழச் செய்தது.

இந்தநிலையில், மீண்டும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த வருடத்தின் இரண்டாவது பெல்கன் ஹேவி (Falcon Heavy) விண்கலத்தை இன்றைய தினம் (திங்கட்கிழமை) விண்ணில் ஏவியுள்ளது. கனடாவின் புதிய தயாரிப்பான டெஸ்ட்லர் 18 தொடர்பாடல் செய்மதியை இந்த விண்கலம் ஏந்திச் செல்கின்றது.

மழை மற்றும் மேக மூட்டமிக்க காலநிலையால் ஒரு மணித்தியால தாமதத்துடன், மேற்கத்தைய நேரம் அதிகாலை 12.45 (0445 ஜி.எம்.டி) க்கு ப்ளோரிடாவிலுள்ள கேப் கனவரல் விண்வௌி ஏவதளத்திலிருந்து குறித்த விண்கலம் பயணத்தை ஆரம்பித்தது.

விண்கலம் புவி மண்டலத்தை கடந்து விண்வௌியை அடைந்த பின்னர், ஏறக்குறைய 32 நிமிடங்களில் தொடர்பாடல் செய்மதி வௌியேற்றப்பட்டு விடும் என்று ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.

நாஸாவின் விண்வௌி ஆய்வு பணிகளுக்காக வழங்கப்பட்ட மீள்பாவனை விண்கலத்தின் முதல் கட்ட உந்துகணைகள், அவற்றின் பணி நிறைவடைந்தவுடன் மீண்டும் பூமிக்கு திரும்பி அட்லாண்டிக் சமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா கப்பல் தளத்தில் வந்திறங்கியுள்ளன.