நஃப்டா பேச்சுவார்த்தை: அமெரிக்கா – கனடா பிடிவாதம்

அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சில விடயங்களில் மிகவும் பிடிவாதமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தில் கனடாவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரலான்ட், நேற்றும் (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுத்திருந்தார்.

நேற்றைய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டிருந்த போதிலும் பால் உற்பத்திக்கான ஒதுக்கீடுகள், கனேடிய ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வர்த்தக முரண்பாடுகளை தீர்ப்பது உள்ளிட்ட சில விடயங்களில் மாத்திரம் இரு தரப்பும் பிடிவாதமாக செயற்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக கிறிஸ்டியா ப்ரீலண்ட் தெரிவிக்கையில், ”அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி ரொபர்ட் லைதிசருடன் மற்றுமொரு ஆக்கபூர்வமான இது அமைந்திருந்தது. இந்நிலையில், எமது அதிகாரிகள் தொடர்ந்து கடினமாக உழைக்க உறுதிபூண்டுள்ளதுடன், நாளையும் (இன்று) பேச்சுவார்த்தைகளை தொடர தீர்மானித்துள்ளோம்.

கனேடியர்களுக்காக ஒரு சிறந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதே எமது நோக்கம். மேலும், இந்த கடினமான தருணத்தில் பகிரங்க பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதில்லை” என்றும் குறிப்பிட்டார்.