NAFTA பேச்சுவார்த்தை தொடர்கிறது – கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் வோஷிங்டன் விஜயம்!

கனடாவை NAFTA உடன்படிக்கையை மீண்டும் கொண்டுவரும் முகமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் இன்று (புதன்கிழமை) வோஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அந்தவகையில் ஃப்ரீலாண்ட் வெள்ளை மாளிகையின் அருகே உள்ள அலுவலகத்தில் இன்று காலை அமெரிக்க வர்த்தக சர்க்கார் ராபர்ட் லிட்டர்ஸரை சந்திப்பார்.

டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் மெக்ஸிகோவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்நிலையில் மும்முனை NAFTA பேச்சுவார்த்தை வாஷிங்டனில் அக்டோபர் 1 ம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் பேச்சு வார்தைகளை நடத்தும் முகமாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும், 1988ஆம் ஆண்டின் கனடா அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் இரு தூண்களாக விளங்கும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான பொறிமுறை மற்றும் கலாசார பொருட்களுக்கு விலக்களித்தல் போன்றவற்றை உள்ளடக்காத ஒரு ஒப்பந்தத்தில் கனடா கைச்சாத்திடாது என்று பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.

அவ்வாறானதொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் அது தமது இறையாண்மை மற்றும் அடையாளத்தை விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும் எனவும் ஜஸ்ரின் ட்ரூடோ மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.