அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றுதிரளும் நாடுகளில் கனடாவும் இணைவு!

அமெரிக்க அரசாங்கம் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள வரிவிதிப்பு தொடர்பில் ஆராயும் வகையில் நடைபெறவுள்ள மாநாட்டில்  கனடாவும் இணைந்துக் கொண்டுள்ளது.

கனடாவின் சார்பில் மத்திய அனைத்துலக வர்த்தக துணை அமைச்சர் திமோத்தி சார்ஜன்ட் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

ஜப்பானும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இம்மாநாட்டில், மெக்ஸிகோ, கனடா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.

இதில் குறித்த நாடுகளின் துணை அமைச்சர்கள் கலந்துகொண்டு, அமெரிக்க அரசாங்கம் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள வரிவிதிப்பினை எதிர்கொள்வதற்கான தந்திரோபாய வழிமுறைகளை ஆராயவுள்ளனர்.

எனினும் குறித்த மாநாடு எங்கு, எப்போது நடைபெறவுள்ளது என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.