‘Project Switch’ சிறப்பு நடவடிக்கை

ரொரன்ரோ காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையில் பெருமளவான போதைப் பெருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘Project Switch’ எனப்படும் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை ஒன்றை கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ரொரன்ரொ காவல்துறை மேற்கொண்டது.

இந்த நிலையில் இந்த கூட்டு விசாரணை நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு ஒன்று நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30க்கு College Streetஇல் அமைந்துள்ள ரொரன்ரோ காவல்துறையினர் தலைமையகத்தில் நடாத்தப்பட்டுது.

அந்த மாநாட்டில் ‘Project Switch’சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டோர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் போது 5 மில்லியன் டொலருக்கு மேலான பெறுமதியுடைய கொக்கைன் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 27 துப்பாக்கிகளும் இதன்போது கைப்பற்றப்படடதாகவும், யூன் மாதம் 25ஆம் திகதி 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும், யூலை மாதம் 17ஆம் திகதி 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 34 வயதுடைய ஆண் ஒருவரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.