Markham நகரசபையின் 7ஆம் வட்டாரத்துக்கான நகரசபை உறுப்பினராக Khalid Usman நியமிக்கப்பட்டுள்ளார்

Markham நகரசபையின் 7ஆம் வட்டாரத்துக்கான நகரசபை உறுப்பினராக Khalid Usman நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினராக இருந்த லோகன் கணபதி மாகாணசபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1997 முதல் 2006 வரை இத்தொகுதியில் நகரசபை உறுப்பினராக இருந்த Khalid Usman 2006 நடந்த நகரசபை தேர்தலில் காலித் உஸ்மான் அவர்கள் 7ம் நகரசபை தொகுதிக்கு போட்டியிடாமல் Regional Councilor பதவிக்கு போட்டியிட்டதனால், 7ம் நகரசபை தொகுதிக்கு போட்டியிட்ட லோகன் கணபதி அவர்கள் வெற்றிபெற்றார்.

October மாதம் 22ஆம் திகதி நடைபெறும் நகரசபை தேர்தலில் இந்தத் தொகுதியில் வேட்பாளர்களாக தமிழர்கள் பலரும் போட்டியிட தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் Khalid Usmanனும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் ஏற்கனவே 1997 – 2006 வரை இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Khalid Usman appointed Markham City Councillor 
MARKHAM-City of Markham Council has approved the appointment of renowned community leader Khalid Usman as City Councillor for Ward 7.
He will be replacing MPP-elect Logan Kanapathi.
In a tweet, Mayor Frank Scarpitti stated Khalid Usman, who has previously served as a Councillor, will bring his wisdom and expertise to the Council floor. Congratulations!