G7 உச்சிமாநாட்டிற்காக பாதுகாப்பு நடவடிக்கை

G7 மாநாட்டிற்கான கியூபெக்கின் சார்லவொய்க்கில் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸார் பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளனர்.

7 நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் G7 பேச்சுவார்த்தை இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளதையடுத்து வெளியிலிருந்து இடையூறுகள் எதுவும் ஏற்படாமலிருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின்போது எந்தநாட்டுத் தலைவர்களையும் வெளியாட்கள் நெருங்காக முடியாதவகையில் 10000 பொலிஸார் மற்றும் இராணுவப்படையினர் பேச்சுவார்த்தை நடைபெறும் இடமான Manoir Richelieu உல்லாச ஓய்வுவிடுதியினைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் G7 மாநாட்டின் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு முனைவதாக எதிர்பார்த்து நேற்று மாலை மற்றும் இன்று இடம்பெறவிருந்த சில அமர்வுகளை ரத்து செய்துள்ளதாக கூறப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.