NAFTA வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு காலதாமதம்!

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுக்களை மேற்கொள்வதற்காக கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் நாளை வோசிங்டன் செல்கின்றார்.

அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களுடன் அவர் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை இந்த பேச்சுக்கள் தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்துள்ள கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், இந்த பேச்சுக்களின் மூலம் இதில் சம்பந்தப்படட அனைத்த தரப்பினர்களுக்கும் நன்மை கிடைக்கக்கூடிய வகையில், இயலுமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

எனினும் பேச்சுக்களின் முடிவுகள் எவ்வாறு இருக்கும் எனபதனை தற்போது எதிர்வுகூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில் இழுபறி நிலை தொடரும் நிலையில், அது தொடர்பில் ஒரு முடிவெடுக்கப்பட வேண்டிய நிலையினை எட்டியுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக எதிர்வரும் சில வாரங்களினுள் இந்த பேச்சு குறித்த முக்கிய தீர்மானங்கள் எவையும் எட்டப்படக்கூடிய நிலைமை காணப்படவிலலை என்று, NAFTA பேச்சுக்கள் தொடாபில் கவனம் செலுத்தி வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையானது இலகுவாக அடுத்த ஆண்டு வரையில் இழுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு போக்கையே கொண்டுள்ளதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.