Juanita Nathan தேர்தல் பிரச்சார அலுவலகம் திறக்கப்பட்டது.

எதிர்வரும் ஜூன் 7இல் நடைபெறவிருக்கும் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் Juanita Nathan அவர்களின் பிரச்சார அலுவலகம் கடந்த சனிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் மார்க்கம் & டெனிசன் சந்திப்புக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து வேட்பாளர் Juanita Nathan அவர்களது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்தனர்.