பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு செல்ல சிறுமிக்கு கிடைத்த அதிஸ்டம்!

தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுவரும் வெயித் டிக்கின்சன் எனும் சிறுமி இளவரசர் ஹரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்.

15- வயதுடைய ஒன்ராறியோ தெற்கைச் சேர்ந்த பெண் ஒருவர் தொண்டுப் பணிக்கான அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையிலேயே இவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியின் தாயாரும் வேல்ஸ் இளவரசியுமான மறைந்த டயானாவின் பெயரில் அமைக்கப்பட்ட புற்றுநோயாளர்களுக்கான தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய குறித்த சிறுமிக்கு டயானா விருது கிடைத்துள்ளது.

குறித்த விருதிற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேரில் இவர் ஒருவரே கனடியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருமண வைபவத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் உலகத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை எனினும் 1,200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கென்சிங்ரன் மாளிகை தெரிவித்துள்ளது.