Daniel Jean

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டானியல் ஜீனின் பதவி விலகல் குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம்

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதவி விலகலுக்கும் பிரதமரின் இந்தியப் பயண விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்ததையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டானியல் ஜீனின் பதவி விலகுவதாக கூறியது பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதவி விலகலுக்கும் பிரதமரின் இந்தியப் பயண விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

பிரதமரின் இந்தியப் பயணத்திற்கு முன்னரே, டானியல் ஜீன் ஓய்வு பெறப் போவதான விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வரும் டானியல் ஜீன், அதற்கு முன்னர் இராஜதந்திரியாகவும், துணை வெளியுறவு அமைச்சருமாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.