பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய பேரவையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்தினார். இதன்போத அவர் மேலும் கூறுகையில், பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை.  குறிப்பாக எதிர்காலத்தில் எமது பிள்ளைகளும், எமது சந்ததியும் சிறந்த, தூய்மையான காற்றினை சுவாசிப்பார்கள் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது,Read More →

தென் – மேற்கு ஒன்ராறியோவில் நேற்று (வியாழக்கிழமை) மிதமான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. அமெர்ஸ்ட்ட்புர். ஒன்ராறியோ, வின்ட்சர் தெற்கு பகுதியில் 5 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை குறித்த நிலநடுக்கம் அமெரிக்காவின் பகுதியிலும் உணரப்பட்டதாகவும், குறித்த நிலநடுக்கத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது பொருள் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.Read More →

கியூபாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா கியூபாவின் தலைநகரான ஹாவானாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை கனடா திரும்ப அழைத்துள்ளது. கியூபாவில் உள்ள கனடா நாட்டை சேர்ந்த 10 பேருக்கு விளக்கமுடியாத மூளை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனடா நாட்டு அரசு கூறியுள்ளது.Read More →

ரொறன்ரோ கிழக்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. டான்ஃபோர்த் அவனியூ மற்றும் கிரீன்வூட் அவனியூ பகுதியில், ஸ்ட்ராத்மோர் பொலிவார்டில் அமைந்துள்ள ரொறன்ரோ நகர குடியிருப்பு மாடிக் கட்டடத்தின் 13ஆவது மடியில் நேற்று (புதன்கிழiமை) இத்தீவிபத்துRead More →

கனடாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் மிதமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்னுரைத்துள்ளது. இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி 2.1 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் அது 2 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குறித்த இந்த வளர்ச்சி வீதமானது கடந்த ஆண்டில் இருந்ததைக் காடடிலும் குறைவானது என்பதுRead More →

கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமது பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை காலமும் தகவல்களை வெளியிடாமல் இருந்தமைக்கான காரணத்தை யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 37 வயதான கிருஷ்ணகுமார் கனகரட்ணம் கொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அவர் கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்தார். எனினும்Read More →

ஹம்போல்ட் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கனடா தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட அனுமதிக்காததால் ஒன்ராரியோ நகர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கம்யூனிட்டி சென்டர் முன்பிருந்த கொடியை மக்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர். இதற்கு அந்நகரத்தின் மேயர் Shaun McLaughlin மறுப்புத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்கள் அவர் மீது மக்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த மேயர், சஸ்காட்ச்வான் விபத்து கொடூரமான சோகமெனினும் அதற்காக கனடா கொடியை தாழ்த்திப்Read More →

சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து தப்பி கொலை வெறியனின் கையில் அகப்பட்டு கனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம். கனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட அவனது கொலை வெறிக்கு பலியான 8வது நபராக மேலும் ஒரு ஈழத்தமிழர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய கிருஸ்ணகுமார் கனகரத்தினமே கொலையுண்ட 8வது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொலையுண்டவர்களில் ஒருவராக 40Read More →

ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி வந்த எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து, கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் தற்போது பிரிடிஷ் கொலம்பியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊடகங்கள், குறித்த கப்பலில் தற்போது மிருகங்கள் வசிப்பதாக தெரிவித்துள்ளன. எனினும், அந்த கப்பலை என்ன செய்வது என்பது குறித்து அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், 492Read More →

சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். பெருவுக்கான மூன்றுநாள் பயணத்தின் முடிவில் தலைநகர் லீமாவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாம் இந்த தாக்குதலுக்கான பலத்த ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளோம் எனவும் குறித்த தாக்குதல் திட்டம் தொடர்பில் கனடாவுக்கு நேரத்துடனேயே தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு வாரத்தின் முன்னர் சிரியாவின் டூமா நகரில்Read More →