புகழ்பெற்ற தவில் கலைஞர் அ. மனோகரன் காலமானார்

ரொறன்ரோவின் புகழ்பெற்ற தவில் கலைஞர் அ. மனோகரன் (அண்ணாமலை மனோகரன்) காலமானார்.

மட்டக்களப்பு அரசடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவில் கலைஞர் அண்ணாமலை மனோகரன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.

ரொறன்ரோவில் திறமையால் புகழ்பெற்ற கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் கலைஞர் மனோகரன்.

அன்னாருக்கு எம் இறுதி வணக்கம்.