NDP முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகின்றார்

புதிய சனநாயக கட்சியின்(NDP) முன்னாள் தலைவர் Tom Mulcair, எதிர்வரும் ஆண்டுடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் புத்தாண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுடன், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க முடிவு செய்துள்ளதனை புதிய சனநாயக கட்சியின் பேச்சாளர் உறுதிப்படுத்தி்யுள்ளார்.

அதேவேளை அவர் பதவிவிலகும் நாள் தொடர்பிலான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டதன் பின்னர், Tom Mulcair பல்கலைக்கழகம் ஒன்றில் கற்பித்தல் துறையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், எந்த பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றப் போகின்றார் என்ற விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவிலலை.

2012ஆம் ஆண்டின் புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற அவர், வரலாற்றில் முதல் தடவையாக புதிய சனநாயக கட்சியை கனேடிய பாராளுமன்றின்  அதிகாரபூர்வ எதி்ரக்கட்சி என்ற நிலைக்கு தரமுயர்த்தியிருந்தார்.

எனினும் 2015ஆம் ஆண்டு தேர்தலில் பாரிய பின்னடைவை கட்சி சந்தித்த நிலையில், கடசி உறுப்பினர்களாலேயே தலைமைப் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு, அண்மையில் ஜக்மீட் சிங் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.