NAFTA விவகாரம்: அமெரிக்காவை நோக்கி நகரும் கனேடிய நிறுவனங்கள்?

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்ததக உடன்பாட்டு விவகாரத்தில் காணப்படும் நிலையற்ற ஆரோக்கியமற்ற தன்மை காரணமாக சில கனேடிய நிறுவனங்கள் அமெரிக்காவை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக NAFTA தொடர்பிலான பேச்சுக்களில் இன்னமும் குழப்பங்கள் நீடிப்பதுடன், குறித்த அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்தும் கவலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆறு சதவீதமான கனேடிய நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளின் ஒரு பகுதியை அமெரிக்கா நோக்க நகர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்து்ளளது.

குறித்த அநத நிறுவனத்தினால் கடந்த 16ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அரை ஆண்டு அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகங்களை தனிமைப்படுத்தும் போக்கினால், இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 75 சதவீத பொருட்கள் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், NAFTA உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறுமாக இருந்தால், கனடாவின் ஏற்றுமதித் துறை பாரிய பாதிப்பினை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்மால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,002 நிறுவனங்களில், 23 சதவீதமான நிறுவனங்கள், இந்த NAFTA பின்னடைவு பலத்த பாதிப்பினை ஏற்படுத்துவதாக கூறியுள்ளதாக கனேடிய ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே அமெரிக்காவை மட்டும் நம்பி உறபத்திகளை மேற்கொண்டுவரும் கனேடிய நிறுவனங்கள், தமது செயற்பாடுகளின் ஒரு பகுதியினை அமெரிக்கா நோக்கி, அமெரிககாவின் எல்லையினுள் நகர்த்தி வருவதாக அல்லது நகர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.