Birch Cliff குடியிருப்பு பகுதியில் தீ பரவல்

இன்று அதிகாலை வேளையில் ஸ்காபரோவின் Birch Cliff குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர்.

Glen Everest வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் 11ஆவது மாடியில், இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தனைச் சென்றடைந்த வேளையில், அந்த கட்டிடத்தில் இருந்து பெருமளவு புகை வெளியேறியவாறு காணப்பட்டதாகவம், 11ஆவது மாடியின் முகப்பு பகுதியில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தவாறு காணப்படடதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர், தீப்பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும், இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவிலலை எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அதனைக் கண்டறிவதற்கான விசாரணைகளில் ரொரன்ரோ தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.