St. Lawrence Market பகுதி விபத்தில் பெண் பலி

St. Lawrence Market பகுதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Church street மற்றும் Front street பகுதியில், நேற்று பிற்பகல் 12.35 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சரக்கு ஊர்தி ஒன்றினால் மோதுண்ட நிலையில், 23 வயது பெண் வாகனத்தின் கீழ் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், இதன் போது 26 வயது ஆண் ஒருவரும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், ஏற்கனவே சில சாட்சியங்களிடம் தகவல்களை சேகரித்துள்ள போதிலும், மேலும் தகவல்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளதுடன், அருகே உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து கண்காணிப்ப ஒளிப்பதிவுகளை பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததுடன், தமது விசாரணைகளுக்கு ஒத்துளைத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.