E. coli பக்டீரியா வெளிப்பாடு காரணமாக ஒருவர் மரணம்

ரொமெய்ன் கீரையில் ஏற்பட்ட E. coli பக்டீரியா வெளிப்பாடு காரணமாக மரணம் ஒன்று சம்பவித்துள்ளதாகவும் கனடாவின் ஐந்து மாகாணங்களில் இந்த பக்டீரியா வெளிப்பாடு கண்டிறியப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா பொது சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை மொத்தமாக 30-பேர்கள் வரை E.coli 0157 பக்டீரியாவால் பாதிக்கப்பட்டதாகவும் ஒருவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மரணம் எங்கு சம்பவித்தது என்பதனையும் மேலதிக விபரங்களையும் அறிக்கை தெரிவிக்கவில்லை.

ஒன்ராறியோவில் ஆறு, கியுபெக்கில் மற்றும் நியுபிறவுன்ஸ்விக்கில் ஐந்து, நோவ ஸ்கோசியாவில் ஒன்று மற்றும் நியுபவுன்லாந் மற்றும் லப்ரடோரில் 13 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கின்றது.

நோயுற்றவர்கள் நான்கு முதல் 80வயதிற்குட்பட்டவர்களெனவும் நோயுற்றவர்களில் 70-சதவிகிதமானவர்கள் பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரொமெயின் கீரை சாப்பிட்ட பின்னர் மேற்குறிப்பிட்ட தொகையில் பெரும்பாலானவர்கள் நோயுற்றனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.