பாடசாலை அமைந்திருந்த வீதியில் இருமடங்கு வேகத்தில் வாகனம் ஓட்டிய பெண்

ஒன்ராறியோ மகாணத்தின் Innisfil நகரில் பாடசாலை அமைந்திருந்த வீதியில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்துக்குப் பதிலாக மணிக்கு 102 கிலோமீற்றர் வேகத்தில் 22 வயதான பெண் ஒருவர் வாகனத்தைச் செலுத்தி காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார்.

உடனடியாகவே சாரதிப்பத்திரமும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கிரிமினல் சட்டத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.